admin

கனமழை, வீடுகளை சூழ்ந்த தண்ணீர். பொதுமக்கள் அவதி.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் சின்ன ஏரி அருகில் உள்ள கருப்பனார் கோவில் பகுதியில் இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள இருபது வீடுகள் சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வருவாய்த்துறையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோட்டில், பாண்டுரங்கர் திருக்கல்யாணம் உற்சவம்.

ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை சங்கத்தின் சார்பில் நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும், தொடர்ந்து ஸ்ரீ பாண்டுரங்கர், ருக்மணி தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

முதியோர் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பென்சன் – மாதர் சங்கம் கோரிக்கை.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் எலச்சிபாளையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத்  துணைத்தலைவர் கோமதி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாவித்திரி கலந்து கொண்டு ஒன்றிய புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்துபேசினார்

நாமக்கல் மாவட்டத்தில், ஆயூஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் அறிமுகம்.

நாமக்கல் மாவட்டத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ஆயூஸ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கிராமப்புற பொது சேவை மைய நிர்வாகிகளுக்கும் இத்திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. வரும் 25 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவரும் சேர்ந்து பயனடையலாம். இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள மத்திய அரசின் பொது சேவை [...]

குமாரபாளையம், லாரி கார் மோதல் மாணவர் இருவர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த காவடியாங்காடு, நாணதட்டு பள்ளம் என்ற இடத்தில் திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் நோக்கி வந்த கார் குமாரபாளையத்தில் இருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு தனியார் தொழிற்சாலைக்கு சென்ற வாட்டர் டேங்க் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. குமாரபாளையம் அருகே உள்ள காளி யண்ண கவுண்டர் நகர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் சந்தோஷ் என்பவரும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவாஜி என்பவரின் மகன் சரவணன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி [...]

குமாரபாளையம், அரசு பஸ் மோதி ஒருவர் பலி.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  கத்தேரி பிரிவு சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற  அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் மீது சேலத்திலிருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியது. விபத்தில் வடிவேலு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மல்லசமுத்திரம் மதுக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவில் இரண்டு நாட்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் பங்கேற்றனர்.

கல்குவாரியில் ஆண் சடலம் காவல்துறையினர் விசாரணை

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பெரியமணலி அடுத்த புது வலவு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது சடலத்தை கைப்பற்றி எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த- 4 பேர் கைது.

யூடியூப்பில் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
error: Content is protected !!