admin

மாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.

தமிழ்நாடு காவல் துறை சார்பில் 58-வது மண்டலங்களுக்குகிடையேயான மாநில அளவிலான காவல்துறையினருக்கான தடகள போட்டி திருவள்ளுவர் மாவட்டம், வண்டலூர்,

மக்கள்பாதை சார்பில் அரசு பள்ளியில் பனை விதை நடவு.

மக்கள் பாதை அமைப்பு சார்பில் உலகப்பம்பாளையம் அரசு பள்ளியில் பனைவிதைகளை விதைக்கும் நிகழ்வு நடந்தது. ஐ ஏ எஸ் அதிகாரி உ.சகாயம் வழிகாட்டடுதலில் இயங்கும் மக்கள்பாதை அமைப்பின்  தாய்மண் திட்டத்தின் சார்பில்  திருச்செங்கோடு அடுத்த உலகப்பம்பாளையம் அரசு பள்ளியில் பனைவிதைகளை விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைைம வகித்தார். துணை தலைமை ஆசிரியை அரங்கநாயகி,  ஆசிரியர்கள் குணசேகரன், முருகானந்தம், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் பாதையின் திருச்செங்கோடு ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன் ,  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வினோத்குமார், [...]

ரூ.40 லட்சம் எரிசாராயம் கடத்தல்,இருவர் கைது

ரூ.40 இலட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்த குற்றவாளிகள் வாகனத்துடன் கைது. ஹரியானாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்திச் செல்லவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பிசெந்தில் தலைமையில் திருச்சி, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இன்று அதிகாலை சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே வாகன சோதனையில் [...]

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.

ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனரிடம் உயர் நீதிமன்ற வக்கீல் என கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளுர் கேட்,கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சதாசிவம் (72), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார்.  ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 2014 ம் ஆண்டு சோலார் லைட் தொழிலுக்கு ரூ.55 லட்சம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்ப [...]

திருச்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே லாரி பட்டறை தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் இவர் திருச்செங்கோடு லாரி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் நேற்று நள்ளிரவில் பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேல் அவரது மகன் பெருமாள் ஆகிய இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது இவர்களது உறவினரான கலையரசன் வீரமணி மனோகரன் ஆகியோர் தந்தை மகனுக்கு இடையேயான தகறாரை விலக்கிவிடச் சென்றனர் இதற்கிடையே சண்டையை [...]

பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டம் ,திருச்செங்கோடு ஜோதி திரையரங்கம் மற்றும் தெய்வம் திரையரங்கம் முன்பு, அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக நடிகர் விஜய் ரசிகர்கள் பூபதி ,பூபாலன், வடிவேலு ஆகிய 3 பேர் மீது திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு திரையங்குகளிலும் இன்று சர்க்கார் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு- ஆட்சியர் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருச்செங்கோடு பகுதியில் ரூ 10 கோடி திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ 10 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்
error: Content is protected !!