vijay

திருச்செங்கோடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் நேரில் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இசிஇ படித்தும் வரும் மாணவர் ஒருவரை ஹாஸ்டல் வார்டன் சராமாரியாக தாக்கியதால் உடல் முழுவதும் காயங்களுடன் மாணவர் இருப்பதை போன்ற புகைப்படம் மற்றும் அது தொடர்பாக மற்றொரு மாணவர் பேசிய ஆடியோ ஆகியவை வாட்சாப் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரப்படுகிறது. இது தொடர்பாக திருச்செங்கோடு தாசில்தார் சுப்பரமணி சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவர் கல்லூரி [...]

சட்டையம்புதூர் முத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்.

திருச்செங்கோடு, சட்டையம்புதூர் முத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முனியப்ப சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்.

ரிக் இன்ஜினியரிங் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகம்

திருச்செங்கோடு இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழா சங்ககிரி ரோடு புள்ளிக்காரர் மில் வளாகத்தில் நடந்தது. பிஆர்டி நிறுவனங்களின் தலைவர் மற்றும் ரெஸ்கா கவுரவ தலைவர் டி.பி.தங்கராஜ் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்க நிர்வாகி பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார், ரிக் 68 ஆயில் விற்பனையை ரெஸ்கா தலைவர் மற்றும் பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன் தொடங்கி [...]

தொழிலாளியின் தலையில் காயமின்றி மூளை அறுவை சிகிச்சை, திருச்செங்கோடு, விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியில் தொழிலாளி ஒருவருக்கு தலையில் காயமின்றி மூளையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.              தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவர் உசிலம்பட்டி  அரசு போக்குவரத்துக் கழக கேண்டீனில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடும் தலைவலி, தலைசுற்றல் மற்றும் மூக்கிலிருந்து  ஒருவகையான திரவம் வடிதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிப்படைந்தார். தமிழகத்தில் முக்கியமான பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.   இந்த நிலையில் நண்பர்களின் ஆலோசனையின்படி [...]

நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம், திருச்செங்கோடு அருகே, ரோட்டில் தேங்கும் மழை நீர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

திருச்செங்கோடு அருகே நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் ரோட்டில் மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாகன விபத்துகளில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனக் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும் பல விபத்துகளுக்கு முறையாக பராமரிக்கப்படாத ரோடுகளும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. அரசு ஆண்டு தோறும் ரோடுகளை பராமரிக்க பல கோடி ரூபாய்கள் செலவிட்டு வந்தாலும் இதனை முறையாக செயல்படுத்த [...]

கேரளா, கர்நாடகாவில்  வேஷ்டி விற்பனை 40 சதவீதம் சரிவு, திருச்செங்கோடு வேஷ்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்பு

            கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வேஷ்டி விற்பனை 40 சதவீதம் சரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் பகுதி வேஷ்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும்பாதிப்படைந்துள்ளனர்.                 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, கைலாசம்பாளையம், குமரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மூலம் வேஷ்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். ஜரிகை [...]

தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்ய, விற்பனைக்குழு ஒற்றை உரிமம் பெற வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-           தமிழ்நாடு அரசு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ன் படி அறிக்கையிடப்பட்ட வேளாண் பொருட்களில் வணிகம் செய்யும் வணிகர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் விற்பனைக் குழுவின் உரிமம் பெற்றே வியாபாரம் செய்ய வேண்டும். அவ்வாறு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பெற்ற உரிமம் சேலம் விற்பனைக் குழுவின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். இதனால் அருகில் உள்ள கோவை, ஈரோடு, திண்டுக்கல், [...]

தூத்துக்குடி துப்பாக்கி சூடு துரதிர்ஷ்டவசமானது – ஸ்ட்ர்லைட் ஆலை தலைவர் வருத்தம்.

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு துரதிர்ஷ்டவசமானது என வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்-அதிமுகத் தொண்டர் குமுறல் (AUDIO)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்-அதிமுகத் தொண்டர் குமுறல் (AUDIO)

திருச்செங்கோட்டில்,விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை – எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் மத்திய அரசின் கிராம சுயராஜ் அபியான் – கிஷான் சம்மேளனம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில்
error: Content is protected !!