vijay

விவசாயம் மூலம், இரட்டிப்பு வருமானம் பெற விவசாயிகளுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயம் மூலம் இரட்டிப்பு வருமானம் பெறுவதற்கான கூட்டுப்பண்ணையம் குறித்து திருச்செங்கோடு வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

 ப்ளஸ்டூ பொதுத்தேர்வு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

  ப்ளஸ்டூ பொதுத் தேர்வில்  திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் அங்கமான கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். 1179 மதிப்பெண்கள் பள்ளியின் முதலிடமாகவும்,1172 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், 1170 மதிப்பெண்கள் மூன்றாம் இடமும் மாணவர்கள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர்.                 பள்ளியில் தேர்வு எழுதிய 158 மாணவர்களில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் [...]

திருச்செங்கோடு திமுக நகர பொறுப்பாளர் நியமனம் – அன்பழகன் அறிவிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக நிர்வாகிகள் சரிவர செயல்படாத காரணத்தால், திருச்செங்கோடு நகர திமுக கலைக்கப்பட்டு, கட்சிப் பணி செவ்வனே நடைபெற புதியதாக திருச்செங்கோடு நகர பொறுப்பாளராக திருச்செங்கோடு பாவடித் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் நியமிக்கப்படுவதாகவும், பொதுக் குழு உறுப்பினர்களாக ராஜேந்திரன், மாதேஸ்வரன், பெருமாள், மகேஸ்வரி, ஆறுமுகம்,ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் திமுக பொது செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.    

திருச்செங்கோட்டில் சிறுவர்கள் இழுத்த திருட்டுத் தேர் – பக்தர்கள் தரிசனம்

 திருச்செங்கோட்டில் ஆண்டு தோறும் பாரம்பரிய வழக்கப்படி சிறுவர்கள் இழுத்துச் செல்லும் திருட்டுத் தேர் என அழைக்கப்படும் அம்மன் தேர் நேற்று இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவின் முன்னோட்டமாக நடக்கும் இந்த தேரோட்டத்தின் பொழுது எட்டு திக்கு [...]

திருச்செங்கோட்டில், அனுமதி பெறாமல் கற்கள் வெட்டிய  இயந்திரம், லாரி பறிமுதல்- தாசில்தார் நடவடிக்கை

 திருச்செங்கோடு அடுத்த கொல்லபட்டி, பாலி காடு பகுதியில் அரசின் அனுமதி  பெறாமல் சிலர் பாறைகளை உடைத்து  கற்கள் எடுப்பதாக  திருச்செஙகோடு தாசில்தார் சுப்பரமணிக்கு தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து தாசில்தார் சுப்ரமணிமணி விஏஓ மணிவண்ணனுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு அனுமதி பெறாமல் சிலர் இயந்திரங்களை கொண்டு பாறைகளை உடைத்து கற்களை எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொஅடர்ந்து பாறையை உடைக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தாசில்தார் ஆபீஸ்க்கு கொண்டு வந்தனர். [...]

திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேசனில் மாணவர்களுக்கு பயிற்சி

திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு காவல்துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி மற்றும் விளக்கமளிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகரப் பகுதியில் கோடைவிடுமுறையில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை  கடைபிடித்தல் போன்றவற்றை முறையாக செயல்படுத்துதல் குறித்து பயிற்சி மற்றும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறையின் செயல்பாடுகள், ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது, குற்ற செயல்பாடுகளை தடுப்பது, குற்றங்களைப் பார்த்தால் காவல்துறைக்கு தகவல் [...]

திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம்  குறித்து பயிற்சி

 திருச்செங்கோடு வட்டாரத்தில் அட்மா பயிற்சி இனத்தில் கூட்டுப்பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் திருச்செங்கோடு அடுத்த பிரிதியில் நடைபெற்றது.

திருச்செங்கோடு அருகே தனியார் பஸ் மோதி முதியவர் சாவு

திருச்செங்கோடு அடுத்த சின்னத்தம்பிபாளையம், நாடார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(80) விவசாயி. நேற்று மாலை மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகளை பிடித்துவர சென்றார். திருச்செங்கோடு – சேலம் ரோட்டை அவர் கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் ராமசாமி மீது மோதியது. தலைநசுங்கிய ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை கைது செய்தனர்.

எலச்சிபாளையம் கண்ணனுார் மாரியம்மன் கோயிலில் திருவிழா

திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சுவாமிக்கு தினம் தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். . நேற்று முன் தினம் மாவிளக்கு பூஜை, பலி கொடுத்தல், தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் என [...]

பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை தனியார் நிறுவனங்களுக்கு  வழங்குதை கண்டித்து ஊழியர்கள் பிரசாரம்

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டவர்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஆண்டனாவை பொறுத்தி சேவையை வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு துணை டவர் நிறுவனம் அமைக்க உள்ளதால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் எனவே இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் நடைபெற்ற விளக்க நிகழ்ச்சிக்கு சங்க கிளைச்செயலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். சிஐடியூ ராயப்பன், பிஎஸ்என்எல் [...]
error: Content is protected !!