சினிமா52 Videos

அஜீத் – ஆர்யா மோதல்

‘பில்லா 2′ படத்தையடுத்து அஜீத் நடிக்கும் புதிய படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று மட்டும்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன.  ஆனால் இப்போது அஜீத், ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தயாராகி வருகிறார் விஷ்ணுவர்தன்.  அஜீத்துடன் மோதும் ஒரு வில்லத்தனமாக கதாபாத்திரத்தில் ஆர்யா நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.  படம் முழுக்கவே ஆர்யா வில்லனாக வருகிறாரா? டூல்லை ஆரம்பத்தில் நெகடீவ் ரோலில் வந்து பின்னர் நல்லவராகவோ அல்லது அஜீத்துக்கு [...]

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் திரையிட தடை நீக்கம், ஐகோர்ட் உத்தரவு – மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு.

விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு விதித்த தடையை நீக்கி இன்று இரவு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் இரவு 10.30 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது, தமிழக முஸ்லீம்களின் எதிர்ப்பால் விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், [...]

கவர்ச்சி அம்மாவாக கலக்கும் நடிகை ‘ரோஜா’

ஆப்பிள் பெண்ணே’ படத்தில் கவர்ச்சியாக வருகிறார் ரோஜா.  தப்பாக நினைக்க வேண்டாம்.  கதை அப்படி.  ஒரு அருவி கரையோரம் சின்ன ஒட்டல் வைத்து நடத்தும்

வாய்ப்புகளை தட்டிக் கழிக்கும் லட்சுமிமேனன்

பிரபுசாலமன் இயக்கியுள்ள ‘கும்கி’ படத்துக்காக தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மலையாள நடிகை லட்சுமிமேனன்.  படத்தில் இவர் அற்புதமாக நடித்திருப்பதாக கேள்விப்பட்ட சசிகுமார், உடனே தனது ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்தார்.  மேலும் ‘கும்கி’க்கு முன்பே அப்படத்தை ரிலீஸ் பண்ணி லட்சுமிமேனனின் திறமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டார்.  சில கம்பெனிகள் தங்கள் படங்களுக்காக லட்சுமிமேனனை அணுகின.   அவரோ, கும்கி எனது முதல் படம்.  அந்த படத்தில் எனது நடிப்புக்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்தே புதிய படங்களை [...]

தமிழகத்தை விட்டு வெளியேறத் தயார் – கமல்ஹாசன்

விஸ்வரூபம் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு எனது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை, தடைக்குத் தடை, தடைக்கு தடை என போய்க் கொண்டே உள்ளது எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை. எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்கவும் இது இந்திய முஸ்லீம்களுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை யோசிக்கின்றேன். நான் எழுதி வைத்து படிக்கவில்லை எனக்குத் தெரிந்த நியாயத்தை பேசுகின்றேன். இன்று தியேட்டருக்குச் சென்ற எனது [...]

அஞ்சல்துறை மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோர்பாளையம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சல்துறை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க நாமக்கல் மாவட்டத்திலேயே தயாராகி வரும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!