சினிமா54 Videos

குத்தாட்டம் போட்ட நடிகை கிரண்

‘ஜெமினி’ உள்பட பல படங்களில் நடித்தவர் மும்பை நடிகை கிரண், நமீதா போல் வாட்டசாட்டமான உடல்கட்டு கொண்ட இவரால் தமிழில் நீண்டகாலம் நிலைக்க முடியவில்லை.

நடிகர் சந்தானத்திற்கு இரண்டாவது திருமணம்? – கோலிவுட்டில் பரபரப்பு.

சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டபோது விழுந்து. விழுந்து சிரிக்கிறார். இதை வீட்ல கேட்டாங்கனா உதை விழும், எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கிறார்கள். தலைவா படத்துல, ஹீரோ பாஸ் எனக்கு பெண் பார்க்கிற மாதிரி சீன் வைச்சாங்க….. அது இப்படி வதந்தியா பரவி இம்சைபடுத்துகிறது என சிரிக்கிறார் சந்தானம்.

இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது – சினிமா தயாரிப்பாளர்கள் தீர்மானம்

சென்னை, “இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம்” என்று சினிமா தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சினிமா தயாரிப்பாளர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி)யை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி, புதிய ஊதியத்தை நிர்ணயித்தனர். “இனிமேல் புதிய சம்பளத்துக்குத்தான் வேலை செய்வோம்” என்றும் அறிவித்தார்கள். [...]

ரசிகர்களிடம் சிக்கித் திணறிய நடிகர் விஜய் சேதுபதி, போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர்

ருத்ராவதியான ” காதல் ” சந்தியா.

அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’பட பாணியில், ‘காதல்’ சந்தியா நடிக்கும்படம் ‘ருத்ராவதி’ ஜாதி கலவரத்தால் ‘அம்மா’ சந்தியாவை சிலர் கொன்றுவிட.., 20 ஆண்டுகள் கழித்து அதே ஊருக்கு வருகிறார் நடிகையாக இருக்கும் ‘மகள்’ சந்தியா, அந்த படப்பிடிப்பு தளத்தில் மந்திரி மகன் மர்மமான முறையில் இறக்க… சிபிஐ ஆபீசர் சுரேஷ்கோபி அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். அப்போது, பல உண்மைகள் தெரிய வருகிறது.  அந்த மர்மம்தான் கதைக் கரு. ருத்ராவதி, சுப்ரியா என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சந்தியா. [...]

ரகசியாவுடன் ரகசிய குத்தாட்டம்.

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் ரகசியாவுடன் கருணாஸ் குத்தாட்டம் போட்ட ஒத்தகல்லு…… ஒத்தகல்லு பாடல் மெஹா ஹிட்டானது. அதே பாணியில் சந்தமாமா படத்தில் மீண்டும் ரகசியாவுடன் கருணாஸ் இணைந்து ரகசிய குத்தாட்டம் போட்டுள்ளாராம்.இந்த பாடலும் செம ஹிட்டாகும் என கருணாஸ் நம்பியுள்ளார். சந்தான கிருஷ்ணன் என்ற அரைகுறை எழுத்தாளன் தனது பெயரை சந்தமாமா என்ற பெயரை மாற்றி வைத்துக் கொண்டு படுகிற அவஸ்தைகளே படத்தின் கருவாம்.

பிரபுதேவாவை விட்டு, நயன்தாரா பிரிந்தார் – 3 வருட காதல் முறிந்தது

சென்னை, நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவை விட்டு, நடிகை நயன்தாரா பிரிந்தார். இருவருக்குமிடையே இருந்த 3 வருட காதல் முறிந்தது. நயன்தாரா மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் விவாகரத்து செய்துகொள்ள சம்மதித்தார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து [...]

நடிகர் விஜயின் அடுத்த படம் சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது

நடிகர் விஜயுடன், நடிகர் ஜீவா இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். நண்பன் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர்குட் ஃப்லிம்ஸின் 100 வது படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.
error: Content is protected !!