தமிழகம்151 Videos

திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார்

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் உடல் உறுப்புகள் ஒத்துழைக்காததால் அவரது உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் காவிரி மருத்துவமனை அறிக்கைகளை வெளியிட்டு கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் கருணாநிதியின் உடல்நிலை [...]

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும், செல்லாது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு. செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு. இரு நீதிபதிகளின் வெவ்வேறான தீர்ப்புகளை அடுத்து மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.30.09.2017 அன்று நீதிபதி துரைசாமி வழங்கிய இடைக்கால தீர்ப்பு நீடிக்கும். சபநாயகரின் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என நீதிபதி இந்திரா பானர்ஜி [...]

புதியதலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு – முத்தரசன் கண்டனம்

புதியதலைமுறை தொலைக்காட்சி சார்பில் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி ஒளிப்பதிவினை பாஜகவினர் தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக புதியதலைமுறை தொலைக்காட்சி மற்றும் கோவை செய்தியாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில்த் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.   புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த 08.06.2018 அன்று கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடத்தியுள்ளது.                இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட [...]

புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய பாஜகவினர் ( வீடியோ)

கோவை, புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பதிவின் போது நடந்தது என்ன ? . கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர். கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நேற்று ( வெள்ளியன்று ) மாலை [...]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முத்து அமுதநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முத்து அமுதநாதன் என்பவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு [...]

நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு ரத்து, விரைவில் மறு தேர்வு – டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்.

நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 2 விற்கு மறு தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு, தர்மபுரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குரூப் 2 தேர்விற்கான வினாத்தாள் வெளியானதை அடுத்து, இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேவாணயத்தின் தலைவர் நட்ராஜ்  த‌லைமையில் அவசரக் கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தி்த்த அவர் கூறியதாவது, வினாத்தாள் தயாரிப்பு [...]

பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ் நிறுவனம் மூடல்? – முதலீட்டளர்கள் ஏமாற்றம்.

பெருந்துறையை தலைமயிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம் மாதாந்திர தொகையை வழங்காததால் அந்நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர் குரு மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர்.இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடிவருகின்றனர்.மேலும் பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று ஏமாற்றிய சுசி ஈமு நிறுவனத்தை இன்று வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மற்றொரு ஈமு நிறுவனமான குயின் ஈமு பார்ம்ஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு [...]

மோசடி புகார் எதிரொலி,பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் சொத்துக்களை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை.

பெருந்துறை சுசி ஈமு நிறுனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பல கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் உரிமையாளர் உள்பட 8 பேர் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை  தேடி வருகிறனர்.மேலும் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கவும் வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் சுசி ஈமு பார்ம்ஸ் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பிரபல பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் [...]

பல கோடி முதலீடு பெற்ற, பெருந்துறை சுசி ஈமு நிறுவன உரிமையாளர் தலைமறைவு? – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனம் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஈமு பண்ண தொழிலை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு தனது நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய் முதலீடுகளை திரட்டியது.இந்த வகையில் இந்நிறுவனத்தில் 12 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர்.சுமார் 200 கோடிக்கும் மேல் முதலீடு பெற்றுள்ள இந்நிறுவனம் ஈமு கறியை பிரபலபடுத்த பெருந்துறை மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிரபல நகரங்களில் உணவகங்களை தொடங்கியுள்ளது. மேலும் [...]

பெருந்துறை ஈமு நிறுவனம் பணம் தராததால் முதலீட்டாளர்கள் முற்றுகை – போலீஸ் விசாரணை.

பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஈமு நிறுவனம் மாதாந்திர தவணைத் தொகையை திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் ஆத்திரமடைந்த முதலீட்டாளர்கள் ஈமு நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த பிரச்சனை குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஈமு நிறுவனம் பிரபல பத்திரிகைகளில் கவர்ச்சியான விளம்பரங்கள் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்து வந்தது. தனது ஈமு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு மாத வருமானமாக ரூ.6 ஆயிரம் [...]
error: Content is protected !!