ஆன்மீகம்85 Videos

நவராத்திரி விழா, திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு.

நவராத்திரி விழாவை ஒட்டி திருச்செங்கோடு பத்ரகாளியம்மனுக்கு நேற்று ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 16 ம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.இதனை ஒட்டி தினசரி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கமலாம்பிகை, பொற்றாமரை கயல்விழி, பிரத்தியங்கரா தேவி, சுபமங்கள லட்சுமி, பிரசன்ன லட்சுமி, வித்யாதேவி, காதம்பரி, ஞானசரஸ்வதி,சியாமாள தேவி, அஷ்டபுஜ காளியம்பாள், என நாள் தோறும் ஒரு [...]

ஆர். புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர் பங்கேற்பு.

நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர். புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்கசூடாமணியம்மன்  கோயில் உள்ளது. வருடந்தோறும் பங்குனி மாதம் இக்கோயில் தேர்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேர்திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீராப்பள்ளியில் இருந்து சாமி புதுப்பட்டி வந்தடைந்தது. அன்றிரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அன்னவாகனத்திலும், திங்கட்கிழமை [...]

திருச்செங்கோட்டில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு   கைலாசநாதர் கோவிலில் , சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் , மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது .

வெள்ளிகவசத்தில் கந்தசாமி.

திருச்செங்கோடு அருகே உள்ள காளிபட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருல்பாலித்தார்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. நண்பகல் செங்கோட்டுவேலவர் சந்நிதானத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் [...]

நாமக்கல் அருகே சிவனை நமஸ்காரம் செய்த சூரியன்.

நாமக்கல் அருகே சிவன் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வை திரளான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர். நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டில் வளையப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பர ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் சுமார் 4 அடி உயரத்தில் ஈஸ்வர லிங்கமும், நான்கரை அடி உயரத்தில் அம்பாள் சிலையும் அமைந்துள்ளது. கிழக்குநோக்கி ஈஸ்வரனும், தெற்கு நோக்கி அம்பாள் சிலையும் அமையப்பெற்றுள்ளது. வடமாநிலங்களில் உள்ள [...]

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் மரகத லிங்கம் உண்மையானதா ? ஆய்வு செய்ய எச் ஆர் என் சி கூடுதல் கமிஷனர் உத்தரவு சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் உண்மையானதா என ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்து சமய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தக் கூடாது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கு ஏழ் சிவத் தலங்களில் முதன்மையானதும் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்றதுமான திருச்செங்கோடு [...]

திருச்செங்கோட்டில் அன்னாபிஷேக விழா.

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில் மற்றும் கூட்டப்பள்ளி சந்திர மவுலீஸ்வரர் கோயில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில்  அருள் நெறி வாரவழிபாட்டு திருக்கூட்டத்தினர் சார்பாக உலக நன்மைக்காகவும், தீவிரவாதம், வன்முறை அகலவும், சகதோரத்துவம் மேலோங்க வேண்டியும் 32 வது ஆண்டு அன்னாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.அன்னாபிஷேக விழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.விழாவில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் பத்தாவது ஆண்டு [...]

இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் தேர்த் திருவிழா தொடக்கம்.

திருச்செங்கோடு,இறையமங்கலம், இளையபெருமாள் கோயில் சித்திரை தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
error: Content is protected !!