ஆன்மீகம்85 Videos

காளிபட்டி கந்தசாமி கோயில் தைபூசத் தேர்த்திருவிழா.

காளிபட்டி கந்தசாமி கோயில் தைபூசத் தேர்த்திருவிழா வரும் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்கவலர் மற்றும் செயல் அலுவலர் செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்துள்ள காளிபட்டி கந்தசாமி திருக்கோயில் தைபூசத் தேர்த்திருவிழா வரும் 23 ம் தேதி புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 30 ம் தேதி வரை நடைபெறுகிறது.23 ம் தேதி மாலை 6 மணிக்கு பருத்திப்பள்ளி நாடு செங்குந்தர் முதலியார்களின் கொடிசேலை கொண்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 [...]

நவதானியத்தால் அம்மன் உருவம்

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் பண்டியை முன்னிட்டு புதுப்பட்டி நான்கு ரோடு விநாயகர் கோயில் அருகே 11 அடி உயரத்தில் நவதானியத்தால் அம்மன் உருவம் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.

கொழிஞ்சிப்பட்டி, பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 10 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

இராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி

இராசிபுரத்தையடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் மஹாசிவராத்திரியை ஒட்டி ஸ்ரீ நாகம்மாயம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை முதல் சக்தி அழைத்தல் , யாகாளி அழைத்தல் , பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்  திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்ச்சியில் மணி என்பவர் அருள் வந்து அங்கு ஏற்கனவே நேர்ந்துவிட்ட ஆட்டகிடாவை பல்லால் கடித்து ரத்தம் குடித்தார் இந்த நிகழ்ச்சி பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த நிகழ்ச்சியை காண புதுப்பாளையம். பட்டணம், கல்லாங்குளம்; [...]

திருச்செங்கோட்டில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை.

திருச்செங்கோட்டில் உலக நன்மை வேண்டி 1009 மஹா திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், திருச்செங்கோடு

நவராத்திரி விழா, திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு.

நவராத்திரி விழாவை ஒட்டி திருச்செங்கோடு பத்ரகாளியம்மனுக்கு நேற்று ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 16 ம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.இதனை ஒட்டி தினசரி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கமலாம்பிகை, பொற்றாமரை கயல்விழி, பிரத்தியங்கரா தேவி, சுபமங்கள லட்சுமி, பிரசன்ன லட்சுமி, வித்யாதேவி, காதம்பரி, ஞானசரஸ்வதி,சியாமாள தேவி, அஷ்டபுஜ காளியம்பாள், என நாள் தோறும் ஒரு [...]

ஆர். புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர் பங்கேற்பு.

நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர். புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்கசூடாமணியம்மன்  கோயில் உள்ளது. வருடந்தோறும் பங்குனி மாதம் இக்கோயில் தேர்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேர்திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீராப்பள்ளியில் இருந்து சாமி புதுப்பட்டி வந்தடைந்தது. அன்றிரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அன்னவாகனத்திலும், திங்கட்கிழமை [...]

திருச்செங்கோட்டில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு   கைலாசநாதர் கோவிலில் , சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் , மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது .

வெள்ளிகவசத்தில் கந்தசாமி.

திருச்செங்கோடு அருகே உள்ள காளிபட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருல்பாலித்தார்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. நண்பகல் செங்கோட்டுவேலவர் சந்நிதானத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் [...]
error: Content is protected !!