ஆன்மீகம்85 Videos

1008 திருவிளக்கு பூஜை – எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அரியாகவுண்டம்பட்டி பெரியமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டி பெரியமாரியம்மன், கதிர்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் புனித நீர் எடுத்து, யானையுடன் கேரள செண்டை மேளம் முழங்க ஊர்வலம் வந்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை சேர்ப்பு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய திருவிழாவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா

ஆர். புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர் பங்கேற்பு.

நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி துலுக்கசூடமணியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர். புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலக்கசூடாமணியம்மன்  கோயில் உள்ளது. வருடந்தோறும் பங்குனி மாதம் இக்கோயில் தேர்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேர்திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீராப்பள்ளியில் இருந்து சாமி புதுப்பட்டி வந்தடைந்தது. அன்றிரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை அன்னவாகனத்திலும், திங்கட்கிழமை [...]

இராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி

இராசிபுரத்தையடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் மஹாசிவராத்திரியை ஒட்டி ஸ்ரீ நாகம்மாயம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை முதல் சக்தி அழைத்தல் , யாகாளி அழைத்தல் , பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்  திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்ச்சியில் மணி என்பவர் அருள் வந்து அங்கு ஏற்கனவே நேர்ந்துவிட்ட ஆட்டகிடாவை பல்லால் கடித்து ரத்தம் குடித்தார் இந்த நிகழ்ச்சி பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த நிகழ்ச்சியை காண புதுப்பாளையம். பட்டணம், கல்லாங்குளம்; [...]

இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் தேரோட்டம்.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள இறையமங்கலம் கோரக்குட்டை இளைய பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை இளைய பெருமாள் சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் திருத்தேருக்கு எழுந்தருளினர். முன்னதாக, அருள்மிகு ஆஞ்சநேயர் தமது தேரில் அமர்ந்தார். சிறப்பு பூஜைக்குப் பிறகு தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் தேர்த் திருவிழா தொடக்கம்.

திருச்செங்கோடு,இறையமங்கலம், இளையபெருமாள் கோயில் சித்திரை தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இளையபெருமாளுக்கு திருக்கல்யாணம்

திருச்செங்கோடு, இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் சித்திரைத் தேர்திருவிழாவில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உரம்பு வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாமகிரிப்பேட்டைஅடுத்த உரம்பு வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சி உரம்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்திற்கு அடுத்தநாள் ஆண்டுதோறும் தேரோட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து கோவிந்தா கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. மேலும், பிரார்த்தனை நிறைவேறிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எடைக்கு எடை காசு, கற்கண்டு ஆகியற்றை காணிக்கையாக வழங்கினர். ஒரு நாள் [...]
error: Content is protected !!