ஆன்மீகம்78 Videos

உரம்பு வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாமகிரிப்பேட்டைஅடுத்த உரம்பு வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சி உரம்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்திற்கு அடுத்தநாள் ஆண்டுதோறும் தேரோட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து கோவிந்தா கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. மேலும், பிரார்த்தனை நிறைவேறிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எடைக்கு எடை காசு, கற்கண்டு ஆகியற்றை காணிக்கையாக வழங்கினர். ஒரு நாள் [...]

தி.கோடு., அர்த்தநாரீஸ்வரர் தேர் நிலை சேர்க்கப்பட்ட காட்சித் தொகுப்பு ( வீடியோ)

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவில் அர்த்தநாரீஸ்வரர் தேரை நிலை சேர்க்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் இழுத்த காட்சி.

முஸ்லீம்களுக்கு மரியாதை செலுத்த, இந்துக்கள் திருவிழா – ராசிபுரத்தில் தொடரும் பாரம்பரியம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் ஸ்ரீசிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்  திருவிழா மார்ச் 17ந்  தேதி கிராம சாந்தியுடன்  துவங்கியது. 18ந் தேதி அதிகாலை கோவிலில் கொடியேற்றம் நடந்தது.   19ந் தேதி முதல் 26ந் தேதி வரை  ஸ்வாமிக்கு தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் அபிசேசக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 27ந் தேதி அதிகாலை ஸ்வாமிக்கு வள்ளி, தெய்வானை சமேத  திருக்கல்யாணம்  நடைபெற்றது. பின்னர் [...]

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் திருத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோட்டில் அறுபத்து மூவர், தொகையடியார்கள் ஐம்பொன் திருமேனிகள் பல்லக்கில் கிரிவலம் – ஆயிரகணக்கான சிவனடியார்கள் பங்கேற்பு.

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 63 நாயன்மார்கள், தொகையடியார்கள், மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் சந்தான குரவர்கள் உள்ளிட்ட 80 ஐம்பொன் உற்சவத் திருமூர்த்திகளுக்கு திருக்குடநன்னீராட்டு விழா நாளை 23 ம் தேதி நடைபெறுகிறது.இதற்கான விழா கடந்த 19 ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அலைமகள் வழிபாடு, பேரொளி வழிபாடு, நவகோள் வழிபாடு என விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று புதியதாக உருவாக்கப்பட்டுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள், [...]

ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

ராசிபுரம்  பொன் வரதராஜ பெருமாள் ஸ்வாமி கோவிலில் திருத்தேர்விழா கோலகலமாக நடந்தது. ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு விழா கடந்த ஏப்ரல் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, துவஜாரோகணம் நடந்தது. தொடர்ந்து காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் கருடன், அனுமத்தன், அன்னம் உள்ளிட்ட வாகனத்தில் திருவீதி உலாவும், [...]

திருப்பதி திருமலைக்கு, மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி மலைக்கு மணமுள்ள மலர்கள் கொடுத்து அனுப்பும்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி மஹா குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த 15.2.2013 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து அம்மன் அழைத்தல், தீர்த்த குடம், அக்னிசட்டி அழைத்தல், 108 அக்னி கரகம்,அலகு குத்துதல், குத்துவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், பூச்சொரிதல் விழா என நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஹா குண்டம் திருவிழா நேற்று அதிகாலை  நடைபெற்றது.முன்னதாக புஷ்ப [...]

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தீமிதி விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலின் தீமிதி விழா அதிகாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில், பாலமுருகன் கோவிலின் பொங்கல் விழா கடந்த 20ம் தேதி கிராமசாந்தியுடன் தொடங்கியது. இதனையடுத்து மே,21-ல் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி, காப்பு கட்டுதல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் போன்றவையும் நடைபெற்றன. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அம்மனுக்கு நடைபெற்றது. மே.27-ல் பூவோடு பற்றவைத்தல், மே,28-ல் பூவோடு எடுத்தல் போன்றவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான  சக்தி அழைத்தல், [...]
error: Content is protected !!