ஆன்மீகம்69 Videos

முனியப்பம்பாளையம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்கு ஐம்பெரும் பூஜை

ராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் மாரியம்மன் கோவிலில்,  உலக மக்களின் நன்மை கருதி ஐம்பெரும் பூஜை நடந்தது. பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, 

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தீமிதி விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலின் தீமிதி விழா அதிகாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில், பாலமுருகன் கோவிலின் பொங்கல் விழா கடந்த 20ம் தேதி கிராமசாந்தியுடன் தொடங்கியது. இதனையடுத்து மே,21-ல் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி, காப்பு கட்டுதல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் போன்றவையும் நடைபெற்றன. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அம்மனுக்கு நடைபெற்றது. மே.27-ல் பூவோடு பற்றவைத்தல், மே,28-ல் பூவோடு எடுத்தல் போன்றவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான  சக்தி அழைத்தல், [...]

தி.கோடு., அர்த்தநாரீஸ்வரர் தேர் நிலை சேர்க்கப்பட்ட காட்சித் தொகுப்பு ( வீடியோ)

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவில் அர்த்தநாரீஸ்வரர் தேரை நிலை சேர்க்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு தேர் இழுத்த காட்சி.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழா கோலாகலம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் திருத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா 14 நாட்கள் நடைபெறும். கடந்த 16 ம் தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நான்காம் நாள் திருவிழாவான கடந்த 19 ம் தேதி அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகள் திருமலையில் இருந்து [...]

தி.கோடு., வைகாசி விசாகத் தேர் திருவிழா, சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவை ஒட்டி திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புகைப்படம்:” விநாயகா” பாலு

திருச்செங்கோடு வைகாசி விசாகத் திருவிழா, திருமலையிலிருந்து சுவாமி நகருக்கு எழுந்தருளினார்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவை ஒட்டி திருமலையிலிருந்து செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகள் நேற்று நகருக்கு எழுந்தருளினர். திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா கடந்த 16 ம் தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.நான்காம் நாள் விழாவான நேற்று  செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகள் திருமலையிலிருந்து தங்களது பரிவாரங்களுடன் நகருக்கு எழுந்தரும் நிகழ்ச்சி நடந்தது.திருமலையிலிருந்து படிகள் வழியாக சுவாமிகள் வரும்பொழுது ராசிபுரம், மல்லசமுத்திரம் கவுண்டர்களின் மாங்கனி அபிஷேகம் நடைபெற்றது.பகல் ஒரு [...]

திருச்செங்கோடு வைகாசி விழாவை ஒட்டி கம்பன் விழா.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர் திருவிழாவை ஒட்டி திருசெங்கோடு கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடைபெறுகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி வரும் 21 ம் தேதி செவ்வாய்க்கிழமை கைலாசநாதர் கோயில் சொக்கப்பமுதலியார் அரங்கில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத்தின் தலைவரும், ஜான்சன்ஸ் குழுமங்களின் தலைவருமான நடராஜன் தலைமை வகிக்கிறார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பேராசிரியர் பாலதண்டபானி வரவேற்கிறார். சிறப்பு விருந்தினராக சேர்மேன் பொன் சரஸ்வதி கலந்து கொண்டு [...]

திருச்செங்கோடு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. நண்பகல் செங்கோட்டுவேலவர் சந்நிதானத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் [...]
error: Content is protected !!