விவசாயம்60 Videos

மல்லசமுத்திரம் டிசிஎம்எஸ் கிளையில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  7000 மூட்டை பருத்தி ரூ.1 .50 கோடிக்கு விற்பனையானது. இன்று நடைபெற்ற ஏலத்தில்

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

அட்மா திட்ட, திருச்செங்கோடு வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழுக் கூட்டம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம் திருச்செங்கோடு வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

மல்லசமுத்திரத்தில் ரூ 1 கோடிக்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  4500 மூட்டை பருத்தி ரூ 1 கோடிக்கு விற்பனையானது.

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.35 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்   சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர மஞ்சள் ஏலத்தில் 807 மஞ்சள் மூட்டைகள் ரூ.35 லட்சத்திற்கு   விற்பனையானது.

திருச்செங்கோடு,மத்திய அரசு நுண்ணீர் பாசனத் திட்டம் சிறப்பு முகாம்

திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய நுண்ணீர்ப்பாசன திட்டம் குறித்து விளக்கும் சிறப்பு முகாம் திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடந்த சிறப்பு முகாம் பற்றி திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), அன்புச்செல்வி திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம்- ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 2900 (பசு மற்றும் எருமை மாடுகளுக்கு) குறியீடு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோட்டில், நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு வட்டாரத்தில் பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் (பிஎம்கேஎஸ்ஒய்) செயல்படுத்தப்படும் நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

75 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனம் நறுக்கும் கருவி அரசு வழங்குகிறது.

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனபுல் சேதமாகாமல் முழுமையாக கால்நடைகள் உட்கொள்ளும் பொருட்டு 2017 – 2018 ம் ஆண்டிற்கு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 700  மின்சார புல் நறுக்கும் கருவி வழங்கும் பொருட்டு மத்திய அரசு ரூ. 70 லட்சம் மற்றும் மாநில அரசு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
error: Content is protected !!