திருச்செங்கோடு896 Videos

திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வசித்துவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடினர் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த விழாவானது தினசரி ஆராதனை பஜனைகள் தாண்டியா நடனம் என நடைபெற்றது.

திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் வேலூரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் கைது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் நகரில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்செங்கோடு மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகாயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணையில் [...]

சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரணி அறக் கட்டளை மற்றும் ரெட் ராக் ரோட்டரி சங்கம் சார்பில் ஆயுத பூஜையின்போது சாலைகளில் பூசணிக்காயை உடைப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் மீறி உடைக்கப் பட்ட பூசணிக் காய்களை அகற்றவும் கூடிய வாகனத்தை பரணி அறக் கட்டளை தலைவர் வழக்கறிஞர் பரணீதரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள கெத்து மச்சான் எங்க திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியிடப்பட்டது. கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பன்னீர்செல்வம், நடிகர் ரிஷி, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கசாமி ஆகியோர் வெளியிட்டனர்.அஸ்வின் நடிப்பில் வெளியாகியுள்ள கெத்துமச்சான் ஆல்பம் பாடல் திருச்செங்கோட்டில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம் ஏழு நிமிடத்தில் முடிவடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

நீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தமிழகத்தில் வறட்சியைப் போக்க நீர் மேலாண்மை அவசியம் நீர் மேலாண்மை செய்ய தனித்துறை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

திருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சம்பவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தையன்  குடும்பத்தினர் சிறுக் கீரையை சமைத்து சாப்பிடடால் கடும் பாதிப்படைந்தனர் இதில் கந்தனின் மூத்த மகள் அனுஷா உயிரிழந்தார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் மற்றும் சாரண சாரணியர் எனக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசும்போது பெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அரசு சட்டமோ காக்கும் என்பதை மறந்துவிட வேண்டும் என பேசினார்

மாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி போட்டியில் திருச்செங்கோடு அடுத்த உலகம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் பரிசினை பெற்றனர் பரிசு பெற்ற மாணவிகளை அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பாராட்டினர்

திருச்செங்கோடு,டூவீலர்கள் மோதல் இருவர் பலி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,செங்கோடம்பாளையம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கண்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.செல்வம், நவீண் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!