திருச்செங்கோடு673 Videos

கதர் அணிவதின் அவசியம் குறித்து, திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சார்பில் 1930 ம் ஆண்டு இதே நாளில் காந்தி அடிகள் தண்டி யாத்திரை சென்ற நாளை நினைவு கூறும் வகையிலும், பொதுமக்களிடம் கதர் துணிகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை காந்தி ஆசிரமத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி தொடங்கி வைத்தார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி, [...]

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கண்டித்து திருச்செங்கோட்டில்  சேலம் கோட்ட எல்.ஐ.சி   காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக தர்ணா போராட்டம் .திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு  ஊழியர் சங்கத்தின் திருச்செங்கோடு கிளை செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமரன் வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவசுப்ரமணியம்  கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இணைச் செயலாளர் கணேஷ்பாண்டியன், சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை [...]

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் கேட்டு, அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்செங்கோடு அருகே விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் கேட்டு அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செங்கோட்டை அடுத்துள்ள சித்தாளந்தூர் பஞ்சாயத்தித்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார்.ஆர்டிஓ கவிதா வரவேற்றார். விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 900 க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பேன் ஆகியவற்றை வழங்கினார்.விழா முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கிய [...]

தி.கோடு., வைகாசி விசாகத் தேர் திருவிழா, சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர்.

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவை ஒட்டி திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புகைப்படம்:” விநாயகா” பாலு

ஜேசீஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர் அதிகாரபூர்வ வருகை

திருச்செங்கோடு டெம்பிள் ஜேசீஸ் சங்கத்தின் சார்பாக தேசியத் தலைவர் அதிகார பூர்வ  வருகை  விழா திருச்செங்கோடு  செங்குந்தர்  பாவடி  பஞ்சாயத்து  மண்டபத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர்  டாக்டர் எஸ்.சரணவக்குமார்  தலைமை வகித்தார்.   சிறப்பு  விருந்தினர்களாக  ஜேசீஸ் சங்கத்தின் தேசிய  தலைவர் ராமகிருஷ்ணா, மண்டலம் 17ன் தலைவர்  முருகராஜ் மற்றும் மண்டல உதவித் தலைவர்கள் ராஜேஸ்குமார், தென்றல் நிலவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கெளசல்யா அவர்களுக்கு கல்வி [...]

அம்மா திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 33,111 பயனாளிகளுக்கு உடனடி ஆணை – அமைச்சர் தங்கமணி தகவல்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாளையம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், எ.இறையமங்களம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் சத்திநாய்க்கன்பாளையம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற அம்மா திட்டமுகாமிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன்  தலைமைவகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசியதாவது :-  தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அன்று மக்களைத் தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்டத்தின்கீழ் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று, [...]

திமுக தோழமை கட்சிகள் சாலை மறியல்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு விவசாயிகளுக்கு அசோலா உற்பத்தி பயிற்சி

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் பகுதியில் அட்மா 2018-2019 ம் ஆண்டிற்கான மாவட்டத்திற்குள் பயிற்சி இனத்தில் அசோலா உற்பத்தி குறித்த பயிற்சி ஆனங்கூர் கால்நடை ஆஸ்பத்திரியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  இம்முகாமிற்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.  ஆனங்கூர் கால்நடை உதவி மருத்துவர் கெளதமன் கலந்து கொண்டு அசோலா தயாரிப்பு முறைகள், அசோலாவை கால்நடை தீவனமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தார்.  வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் [...]

சிறுமிக்கு பாலியல் கொடுமை இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப் புலி கொளத்து வலவு பகுதியில் 3 1/2 வயது பெண் குழந்தையை நேற்று மதியம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த சுப்பிரமணி (17) (பெயர் மாற்றப் பட்டுள்ளது ) என்ற இளைஞர் போக்சோ என்னும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது எலச்சிபாளையம் போலீசார் நடவடிக்கை
error: Content is protected !!