திருச்செங்கோடு779 Videos

கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரள மாநில மக்களுக்கு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மட்டும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் எம்பி சுந்தரம், எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி, கலெக்டர் ஆசியாமரியம், எஸ்பி அருளரசு உள்ளிடோர் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு திருச்செங்கோட்டில் அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அமைதி ஊர்வலம் நடந்தது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது – ஜி கே வாசன் பேட்டி

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல்லில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்

பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி பெருமாள் அசோகன் வேலுசாமி ஜெயமணி சுரேஷ் முன்னிலை வகித்தனர்.  இந்த போராட்டத்தின் போது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை 500 சதவீதம் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள் [...]

திருச்செங்கோட்டில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் சுதந்திரதின விழா .

திருச்செங்கோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் சுதந்திரதின விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உதயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் திருச்செங்கோடு நகர செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். வக்கீல் குணசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழக மாநில இணை அமைப்பாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.  இதனைத் தொடர்ந்து பாரதமாதா பூஜை  செய்தனர். இறுதியாக ஆர்.எஸ்.எஸ் நகர பொருளாளர் நடேசன் நன்றி கூறினார்.

அனுமதியற்ற மனைகள் வரைமுறைப் படுத்த முகாம்- திருச்செங்கோடு நகராட்சி அறிவிப்பு.

திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப் படுத்துதல் திட்ட முகாமும், விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு அனுமதி வழங்கும் சிறப்பு முகாமும் நடத்தப்பட இருப்பதால் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா  கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

கோயில் திருவிழாவில் மரம் வளர்க்க விழிப்புணர்வு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கணபதி நகர், கருப்பனார் கோயில் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 14 வகையான மரக்கன்றுகள் ஊன்றப்பட்டது.மேலும் மரம் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள், மரக்கன்றுகளை பராமரித்தல், வளர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

திவிக சார்பில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடந்தது. திருச்செங்கோடு நகர திவிக  தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர்  சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆதித்தமிழர் பேரவையின்  மாநில துணைப் பொதுச்செயலாலர் செல்வவில்லாளன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் தமிழரசு, மேற்கு மாவட்ட செயலாளர் [...]

திருப்பதி திருமலைக்கு, மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி மலைக்கு மணமுள்ள மலர்கள் கொடுத்து அனுப்பும்
error: Content is protected !!