திருச்செங்கோடு896 Videos

கோரிக்கை நிறைவேறும் வரை , சாகும் வரை உண்ணாவிரதம் – மக்கள் நலப் பணியாளர்கள் அறிவிப்பு.

திருச்செங்கோடு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் பணி வழங்க மறுக்கும் மாநில அரசை கண்டித்து வரும் ஏப்.10 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர்  தீர்மானித்துள்ளனர். திருச்செங்கோட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.மாநில மகளிரணி  தலைவர் கன்யாகுமாரி, மாவட்டத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் [...]

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை தேவை செங்குந்தர் மகாஜன சங்கம் தீர்மானம்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனை முழுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குந்தர் மகாஜனசங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் 20112012 ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் [...]

திருச்செங்கோட்டில், கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் பயன்படுத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை.

திருச்செங்கோட்டில் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் பயன்படுத்திய வாகனங்கள் மீது போக்குவரத்து துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி மற்றும் வாகன ஆய்வாளர்கள்  ராஜேந்திரன், சிவகுமார்,செந்தில்குமார்,ராஜசேகர் ஆகியோர் திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது வாகனத்தில் இருப்பவர்கள் வெளியே தெரியாத வகையில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை நிறுத்தி [...]

பணம் வைத்து சூதாடிய மூவர் கைது.

திருச்செங்கோடு கொல்லபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கொல்லபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(35), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(28), ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

டூ வீலர்கள் மோதல், தனியார் பள்ளி ஆசிரியர் பலி.

திருச்செங்கோடு அருகே டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, புளியமரத்து தெரு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(32) இவர் திருச்செங்கோடு  தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதேவி. இருவருக்கு கடந்த ஓராண்டிற்கும் முன் காதல் திருமணம் நடந்தது. கவிதேவி தற்பொழுது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.இருவரும் திருச்செங்கோட்டை அடுத்த காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்தனர்.நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு குப்புசாமி தனது [...]

திருச்செங்கோடு திருமலையில் கார்த்திகை தீபம்

திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலைக் கோயிலில் நேற்று மாலை கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மஹா தீபம் ஏற்றுவது வழக்கம். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு அடுத்த நாள் திருச்செங்கோட்டில் கார்த்திகை தீப ம் விழா நடைபெறும். வழக்கம் போல் இந்த ஆண்டும் கார்த்திகை மஹா தீபம் ஏற்றும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக திருமலையின் உச்சியில் உள்ள பாண்டீஸ்வரர் ஆலயத்தில்  மெஹா கொப்பரை [...]

கவரிங் நகை தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுநீரால், திருச்செங்கோடு 2 வது வார்டு பொதுமக்கள் பாதிப்பு.

திருச்செங்கோடு நகராட்சி 2 வது வார்டு சண்முகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கவரிங் நகை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருவதுடன், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு செங்கோடம்பாளையம், சண்முகபுரம் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீரே ஆதாரமாக இருந்து வருகிறது.இந்நிலையில் சண்முகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கவரிங் நகை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் [...]

திருச்செங்கோடு திருமலையில், திருப்படித் திருவிழா ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்செங்கோடு திருமலையில்  50 வது திருப்படித் திருவிழா நடந்தது.இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டு திருப்புகழ் பாடி செங்கோட்டு வேலவரை தரிசித்தனர். திருச்செங்கோடு திருமலை பாடல் பெற்ற கொங்கு ஏழ் சிவத்தலங்களில் முதன்மையானதாகும். திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற தலம். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழில் 21 பாடல்களும், கந்தர் அலங்காரத்தில் 8 பாடல்களும், கந்தர் அந்தாதியில் 6 பாடல்களும், கந்தர் அநுபூதியில் 1 பாடலும் திருச்செங்கோடு திருமலையில் உள்ள செங்கோட்டு [...]
error: Content is protected !!