திருச்செங்கோடு930 Videos

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் – பணம் செலுத்த மக்கள் குவிந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை.

திருச்செங்கோடு, திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் இணைவதற்கு நூறுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ரூ.1 கோடி பணம் செலுத்தினர்.நேற்றும் பணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.மேற்கண்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம்  மாவட்டம் மேட்டூர்,கருமலைக்கூடல் பகுதியில் தனியார் ஈமு நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் ஒன்பது பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்நிறுவனத்தின் சேவை மையம் திருச்செங்கோட்டிலும் உள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது தான் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தில்  ரூ.1 லட்சம் செலுத்தி இணையும் நூறு நபர்களுக்கு  மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 14 மாதங்களுக்கு வழங்கப்படும் [...]

திருச்செங்கோடு எல்ஐசி ஊழியர் மாயம்.

திருச்செங்கோடு கொல்லபட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவர் திருச்செங்கோடு எல்ஐசி கிளையில் எழுத்தராக இருக்கிறார். இவருக்கும் ஜெயகாந்தி (37) என்பவருக்கும் சுமார் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவியரசு (20) என்ற மகனும்  கவிப்பிரியா (18), கவி முகில் (16) ஆகிய மகள்களும் உள்ளனர்.  கடந்த 4-ந் தேதி காலை வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளமபிய ஆறுமுகம்  அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க [...]

நாமக்கல் கலெக்டரை மாற்ற கோரி ஜூலை.27ல் உண்ணாவிரதம். வருவாய்த் துறை அலுவலர்கள் தீர்மானம்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளை அவமரியாதை செய்து வருவதால் அவரை  மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தங்கராசு, கதிர்வேல், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆய்வு கூட்டங்களில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் [...]

பெண்கள் எவ்வளவு உயர்வை எட்டினாலும், பெண்களுக்கான இலக்கணத்தை மீறக் கூடாது – உயர்கல்வி துறை இயக்குனர் பேச்சு.

திருச்செங்கோடு, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் பெண்கள் இயல்பிலிருந்து மாறக் கூடாது என்றார் தமிழக உயர்கல்வித் துறை இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரிகளின் சார்பில் கல்லூரி தின விழா நடந்தது.கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தாளாளர் டாக்டர்.மு.கருணாநிதி தலைமை வகித்தார்.டிரஸ்டி கிருஷ்ணவேணி கருணாநிதி,நிர்வாக அலுவலர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர்கள் முருகேஷ், ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக [...]

 ப்ளஸ்டூ பொதுத்தேர்வு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

  ப்ளஸ்டூ பொதுத் தேர்வில்  திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் அங்கமான கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். 1179 மதிப்பெண்கள் பள்ளியின் முதலிடமாகவும்,1172 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், 1170 மதிப்பெண்கள் மூன்றாம் இடமும் மாணவர்கள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர்.                 பள்ளியில் தேர்வு எழுதிய 158 மாணவர்களில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் [...]

100 நாள் வேலை திட்டத்தில், கூலி ரூ.148 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தினக்கூலி ரூ.148 வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தினக்கூலி ரூ.148 வழங்க வேண்டும். வேலைக்கு வருவோரை வேலை இல்லை என திருப்பி அனுப்பக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் முதலுதவிப் பெட்டி வைக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் கூலி வழங்கப்படாமல் நிறுத்தி வைப்பதைக் [...]

1008 திருவிளக்கு பூஜை – எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில்

2.8 டன் குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் குட்கா போதைப்பொருள் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பரமத்தி வேலூர் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் அருளரசு,  வாகன தணிக்கை செய்ய உத்தரவிட்டதன் பேரில் டிஎஸ்பி ராஜு தலைமையில், காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார், உள்ளிட்ட போலீசார் வேலூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இரண்டு மினி ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். மேற்கண்ட ஆட்டோக்களில் போதை வஸ்துகளாக பயன்படுத்தப்படும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா [...]
error: Content is protected !!