திருச்செங்கோடு930 Videos

திருச்செங்கோட்டில்,பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அன்னதானம்.

திருச்செங்கோடு, மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செங்கோட்டில் கிரிவலம் நடந்தது. கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்செங்கோட்டில் பௌர்ணமியை  ஒட்டி கிரிவலம்  நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்  சங்ககிரி, பவானி, குமாரபாளையம், ஈரோடு, எடப்பாடி, சேலம், வேலூர், மல்லசமுத்திரம்,வையப்பமலை,கரூர் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  அர்த்தநாரீஸ்வரர் திருமலையை கிரிவலம் வந்தனர். பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்  ,செங்கோட்டு வேலவர்,ஆதிகேசவ பெருமாள், ஆதி நாகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும்,கைலாசநாதர் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், அருள் மாரியம்மன் கோயில்களிலும் [...]

டூவீலர்கள் மோதல் தனியார் கல்லூரி தொழிலாளி பலி.

திருப்பூர் மாவட்டம்,குன்னத்தூர், வெள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30).இவர் திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு நோக்கி சென்றார்.திருச்செங்கோடு மலையடிவாரம் பெரிய ஓங்காளியம்மன் கோயில் அருகே பிரகாஷ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பிரகாஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு டவுன் போலீசார் [...]

திருச்செங்கோடு வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆகிய சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. நண்பகல் செங்கோட்டுவேலவர் சந்நிதானத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்க கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் [...]

மாநில சப் ஜூனியர் செஸ் போட்டி, சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை.

திருச்செங்கோட்டில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் செஸ் போட்டியில் மாணவியர் பிரிவில் சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் செஸ் போட்டிகள் திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது.இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதுமிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 11 சுற்றுகளாக நடக்கும் இப்போட்டியின் 6 வது சுற்றில் 15 வயதிற்குட்பட்ட [...]

திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம், இன்டர்நெட், எஸ்.எம்.எஸில் வதந்தி பரப்புவர்கள் மீது போலீசில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உண்மைக்கு மாறாக இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ்களில் வீண் வதந்திகள் பரப்பட்டு வரப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த கோரி கல்லூரி நிர்வாகம் சார்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் பிடெக் ஐடி இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஊத்தங்கரை, காட்டேரி, வேப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகள் காயத்திரி(19) தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து கல்லூரி விடுதி அறையில் [...]

மின்சார வாரியத்தின் அலட்சியம்,மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி.

திருச்செங்கோடு அருகே மின்சார வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் பலியானது. திருச்செங்கோட்டை அடுத்துள்ள ராக்கியா வலசு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன்(35) கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் மூன்று எருமை மாடுகளையும், இரண்டு பசுமாடுகளையும் வளர்த்து வந்தார்.இன்று அதிகாலை 1 மணி அளவில் செங்கோட்டையன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த உயர் மின்அழுத்த கம்பத்திலிருந்து தீப்பொறியுடன் மின் கம்பி அறுந்து விழுந்தது. அந்த சமயத்தில் மழை பெய்து [...]

மினி பஸ்ஸில் தகராறு, பயங்கர ஆயுதங்களுடன் மோதல்,மளிகை கடை சூறை – 3 பேர் காயம்.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள கோயில்பாளையம் பகுதி இளைஞர்களுக்கும், அப்பூர்பாளையம், சிலோன் காலனி பகுதி இளைஞர்களுக்கும்  மினி பஸ்ஸில் பயணம் செய்தபோது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதில் கோயில்பாளையம் பகுதி இளைஞர்கள் சிலோன் காலனி இளைஞர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று கோயில்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து கண்ணில் பட்டவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் கோயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அஜீத், கதிர்வேல் [...]

அரசு பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பயிற்சி.

இறையமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் ஒருபகுதியாக ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் விஜயபாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியம், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் ஆகியோர்  பங்கேற்று மாணவ, [...]

மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து பிஜேபியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் காவி தீவிரவாதம் குறித்து தவறான கருத்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷின்டே வை கண்டித்து திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகர தலைவர் மதியழகன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் ஹரிஹரகோபாலன், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் [...]

கள்ளசாராயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி.

திருச்செங்கோட்டில் கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை ஆர்டிஓ கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தாசில்தார் சிவகுமரன், மாவட்ட கலால் உதவி இயக்குனர் செல்வராஜ், கோட்ட கலால் அலுவலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது.இப்பேரணியின் பொழுது கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் [...]
error: Content is protected !!