திருச்செங்கோடு896 Videos

வழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.

அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக, தினகரன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் மூலம் முயற்சித்ததாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் இருந்து வடிந்து செல்லும் கழிவுநீர் மற்றும்  மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நீண்ட நாட்களாக நிற்பதால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி எஸ்பி அருளரசு தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மெகா அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியினை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தொடங்கி வைத்தார்

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கண்டித்து ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது இதனை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி மற்றும் காவல்துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மோளிபள்ளியில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

திருச்செங்கோடு  தாலுகா, எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட மோளிப்பள்ளி  அருந்ததியர்  தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே இரு தரப்பினரிடையே மோதல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பருத்திப்பள்ளி அண்ணன்மார் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஐந்துபேர் காயம்

திருப்பதி பிரமோற்சவம் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் விழாவிற்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

மோடமங்கலம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜக ஆர்பாட்டம்.

திருச்செங்கோடு ஒன்றிய பாஜக சார்பில் மோடமங்கலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டதிற்கு திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாதார பிரிவு துணை தலைவர் அப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார், ஆர்பாட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏழுமலை, ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, திருச்செங்கோடு [...]
error: Content is protected !!