நாமக்கல்900 Videos

போக்குவரத்து தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் – மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

நாமக்கல், போக்குவரத்து தொழிலுக்கு விதிக்கப்பட்டு உள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- நாடு முழுவதிலும் அத்தியாவசிய பொருளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து சரக்குகளையும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்து செல்வதில் சாலை போக்குவரத்து தொழில் மிக சிறந்த பங்காற்றி வருகிறது. அவ்வாறு ஈடுபடுகின்ற [...]

நாமக்கல் அருகே பாலத்தில் கார் மோதி விபத்து – 5 பேர் பலி

நாமக்கல் அருகே கார் பாலத்தில் மோதிய விபத்தில், திருமண விழாவுக்கு சென்ற உருளைகிழங்கு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானர். வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 50), உருளை கிழங்கு வியாபாரி. இவரது மகன் ஜாகீர்உசேனுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பழனி ஆயக்குடி பகுதிகளில் இருந்து வந்த உறவினர்கள் கொணவட்டத்தில் உள்ள முகமது [...]

தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதி.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் வசதியை கலெக்டர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்து பேசியதாவது: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், பஸ்ஸ்டாப்பிலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பேட்டரி கார் வசதியை  ரூ.4 இலட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி கார் மாவட்ட புதுமையாக்கல் நிதியிலிருந்து பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.40,000-மும், அரசு [...]

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மாநில மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற ராசிபுரம் எஸ்.ஆர்.வி ஹைடெக் பள்ளி மாணவி பூஜாஸ்ரீயை கலெக்டர்(பொ) கோ.செங்குட்டுவன் பாராட்டி பரிசு வழங்கினார்

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது – கலெக்டர் எச்சரிக்கை

விவசாயத்திற்கென பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன உரங்களுக்கு மத்திய அரசு மான்யம் வழங்கி வருகின்றது.  நேரடி விவசாய பயன்பாடு தவிர தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டும் மானிய விலையில் உரங்களை பெற்று மூலப்பொருளாக பயன்படுத்தலாம்.  இது தவிர மற்ற உபயோகங்களுக்கு மானியத்தில் வழங்கப்படும் உரங்களை பயன்படுத்துவது உரக்கட்டுப்பாடு ஆணையினை மீறிய செயலாகும். தொழிற்சாலை உபயோகத்திற்கான உரங்களை பயன்படுத்துவோர் டெக்னிகல் கிரெடு யூரியாவினை மட்டும் பயன்படுத்திட வேண்டும். டிஏபி, மற்றும் பொட்டாஸ் போன்ற உரங்களை தொழிற்சாலை [...]

கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி சஸ்பெண்ட்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் வரை மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவியின் புகாரையடுத்து புதுச்சத்திரம் போலீசார் இடைநிலை ஆசிரியர் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், புரோக்கர்கள் தேடப்பட்டு வரப்படுகிறார்கள். இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை [...]

அறிவுள்ள சமுதாயம் உருவாக நூலகங்கள் துணை நிற்கின்றன – அமைச்சர் பி.தங்கமணி பேச்சு.

நாமக்கல் கவின்கிஷோர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலகம் சார்பில் 45-வது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கியும் விழாவில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம் 47 கிளை நூலகங்கள், [...]
error: Content is protected !!