நாமக்கல்858 Videos

கேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்காக  நீண்ட நாட்களாக தான் சேர்த்து வந்த உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக வழங்கி ஒன்றாம் வகுப்பு மாணவி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

காவிரி ஆற்று பாலங்களில் போக்குவரத்து நிறுத்தம்.

காவிரி ஆற்றில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் காவிரி ஆற்று பாலங்கள் மீது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே பெண் கொலை – மூன்று பெண்கள் கைது.

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்காணி தெருவை சேர்ந்தவர்  மூக்காயி (எ)அமராவதி(70). தனது மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 9ம் தேதி, வீட்டில் கழுத்து  நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 14 சவரன் தங்க   நகைகள்

காவிரி கரையோரம் வெள்ளம், 695 பொதுமக்கள் வெளியேற்றம்- ஆட்சியர் நேரில் ஆய்வு.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரியாக வரும் தண்ணீர் முழுவதுமாக திறந்து விடப்படுகிறது. தற்போது 1.70 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் [...]

சுதந்திர தின விழா, ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாக மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்ட அவர் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு அலுவல்களில் நற்பணி மேற்கொண்டவர்களுக்கு  பதக்கங்களை அணிவித்தார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளார் அருளரசு [...]

காவிரி கரை ஓர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், காவிரி கரையோர மக்களுக்கு இன்று வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோகுல்ராஜ் கொலை வழக்கு, ஆகஸ்டு 30 முதல் நீதிமன்றத்தில் விசாரணை – நீதிபதி அறிவிப்பு.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த பொறியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத் துறையில் சத்துணவு அமைப்பாளர் நிலையில் 142 காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 23.08.2018 அன்றும் சமையல் உதவியாளர் நிலையில் 572 காலிப்பணியிடங்களுக்கு 24.08.2018 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்மு.ஆசியா மரியம்,வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அருகே மூதாட்டி கொலை.4 சவரன் நகை கொள்ளை

நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிபட்டி கங்காணி தெருவைச் சேர்ந்தவர் அமராவதி(70). இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதியுடன் அவரது மகள் ராஜேஸ்வரி(53)
error: Content is protected !!