நாமக்கல்900 Videos

“சேலம்-கரூர் பயணிகள் ரயில் இயக்க தாமதம்..” – பின்னணியில் டிராவல்ஸ் நிறுவனங்கள் சதி..?

 – வெள்ளை ஈசன் பதினெழு ஆண்டுகளாக இதோ, அதோ என்று இழுத்து வந்த சேலம்-கரூர் அகல ரயில் பாதை வேலை முடிந்து தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் பயணிகள் ரயிலை இன்னும் இயக்கவில்லை.’ என்று சேலம், நாமக்கல், கரூர் என்று மூன்று மாவட்ட மக்கள் புலம்பி வந்த நிலையில்… உடனடியாக சேலம்-கரூர் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க சொல்லி, பொது நல அமைப்புகளோடு சேர்ந்து சேலம் ரயில்வே மண்டல அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போரட்டத்தை வருகிற [...]

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு, நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சாதனை – கலெக்டர் பாராட்டு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசுப்பள்ளியில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்கி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 13,147 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 11,398 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.16 ஆகும். [...]

நாமக்கல்லில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர்கள் தின இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர்  டி.ஜகந்நாதன் துவக்கிவைத்தார். இந்தப்பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சுரபி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், சி.எம்.எஸ்.கல்லூரி மாணவ, மாணவிகள் செவிலியர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, திருச்சிரோடு வழியாகச்சென்றது. பேரணியில் சென்ற மாணவ, மாணவியர்கள் இரத்ததானத்தின் அவசியத்தை குறித்தும், பாதுகாப்பான இரத்தம் [...]

மத்திய அரசை கண்டித்து – நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து கட்சியின் அமைப்பு செயலாளர் சி.பொன்னைய்யன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கினை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.  இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக சார்பில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடந்தது.  கட்சியின் [...]

நில ஆக்கிரமிப்பு வழக்கில் மெத்தனம், புதுசத்திரம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

ராசிபுரத்தை அடுத்துள்ள ஏ.கே சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி  ராமசாமி இவருக்கு சொந்தமான நிலத்தை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பழனிவேல் அடியாட்களை வைத்து மிரட்டி அபகரித்ததுடன் அந்நிலத்திலிருந்த ராமசாமியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி நிலத்திலிருந்த பாசன கிணற்றையும் மூடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து ராமசாமியின் மகள் சித்ரா புதுசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் பேரில் புதுசத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.இப்பிரச்சனை குறித்து சித்ரா தரப்பினர் முதலமைச்சரின் [...]

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.

  உடலையும், உள்ளத்தையும் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் புதியதலைமுறை தொலைக்காட்சி சார்பில் கடந்த 8 ம் தேதி கோவையில் நடந்த வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த விடாமல் பாஜ கட்சியினர் மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையூறு செய்து நிகழ்ச்சியை நிறுத்தினர். இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி, செய்தியாளார் சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற [...]

பி.சி, எம்.பி.சி, டி.என்.சி மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணபிக்க அழைப்பு.

           நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

மேட்டூர் ரவுடி கொலை வழக்கு, 5 பேர் நாமக்கல் கோர்ட்டில் சரண்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோம்பூரான் காடு மதுக்கடையில் இரு கோஷ்டிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த ரவுடி கண்ணன் (30) என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. கொலை செய்யப்பட்ட ரவுடி கண்ணன் மீது கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை [...]

தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பி;ல் வரும் 10-ம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்;டம் 06.08.2018 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், கூறியதாவது,

காவிரி கரை ஓரம் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஜேடர்பாளையம் பரமத்திவேலூர் உள்ளிட்ட காவிரி ஆற்றுக் கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
error: Content is protected !!