நாமக்கல்911 Videos

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசு – அமைச்சர் வழங்கினார்.

நாமக்கல் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில்  59- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர்  டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுகள் மற்றும் கடனுதவிகள் வழங்கி விழாவில் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் கூட்டுறவுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் தொழில் முனைவோர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கவேண்டும் என உத்தரவிட்டதின் அடிப்படையில் கூட்டுறவு [...]

உலக முதியோர் தின விழா கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர்  ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதியோர்கள் தாங்கள் வருவாய் ஈட்டும் காலங்களில் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும். அப்படி சேமித்து வைத்தால் வயதான காலத்தில் இந்த சேமிப்பு தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்-2007 தற்போது நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி முதியோர்களை தங்கள் பிள்ளைகள் பராமரிக்கவில்லையெனில் அவர்கள் இதுகுறித்து [...]

கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி அரசு ஊழியர்கள் ஏற்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் இன்று 12.6.2012 காலை 11.00 மணிக்கு கலெக்டர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், [...]

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் சட்ட விதிகள் அமுலாக்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புப் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தேவையான பாடநூல்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் வழங்கிட வேண்டும். பேருந்து நிலையங்களில் பிச்சை எடுக்கும் சிறார்களையும், பம்பை மற்றும் சாட்டை அடித்து பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் தடுத்திடும் வகையில் உரிய கண்காணிப்பு பணியினை நகராட்சி ஆணையர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று [...]

நாமக்கல் லாரி பட்டறை அதிபர் வீட்டில் 15 1/2 பவுன் நகை திருட்டு.

நாமக்கல் லாரி பட்டறை அதிபர் வீட்டில் 15 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் கணேசபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவரது மனைவி வாசுமதி (30). இவர்களுக்கு காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர். நாமக்கல் – துறைïர் ரோட்டில் சேகர், லாரி பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சேகர் சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தினருடன் [...]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்களை பெற்றார்

 நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  கோ.செங்குட்டுவன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர்வசதி, சாலைவசதி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, கடனுதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்கு மற்றும் பிற உதவிகள் கேட்டு 692 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு வழங்கி ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர்  கோ.செங்குட்டுவன் அவர்கள்; உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் [...]

“சேலம்-கரூர் பயணிகள் ரயில் இயக்க தாமதம்..” – பின்னணியில் டிராவல்ஸ் நிறுவனங்கள் சதி..?

 – வெள்ளை ஈசன் பதினெழு ஆண்டுகளாக இதோ, அதோ என்று இழுத்து வந்த சேலம்-கரூர் அகல ரயில் பாதை வேலை முடிந்து தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் பயணிகள் ரயிலை இன்னும் இயக்கவில்லை.’ என்று சேலம், நாமக்கல், கரூர் என்று மூன்று மாவட்ட மக்கள் புலம்பி வந்த நிலையில்… உடனடியாக சேலம்-கரூர் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க சொல்லி, பொது நல அமைப்புகளோடு சேர்ந்து சேலம் ரயில்வே மண்டல அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போரட்டத்தை வருகிற [...]

+2 பொதுத்தேர்வு முடிவுகளை நாளை ஆட்சியர் வெளியீடுவார் என அறிவிப்பு, பத்து மணிக்குள் பள்ளிகளில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு.

நாமக்கல் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் பல்வேறு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பல்வேறு விஷங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த +2 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுமுடிவுகள் 9.5.2013 அன்று வெளியாகவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 96 பள்ளிகள் மற்றும் 79 தனியார் பள்ளிகளைச்சார்ந்த மாணவ, மாணவியர்கள் +2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்கள். [...]

+2 பொதுத்தேர்வு, மாவட்ட அளவில் முதலிடம் பெரும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு – ஆட்சியர் அறிவிப்பு.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கான ஊக்குவிக்கும் முகாம்  நடைபெற்றது. இம் முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பேசியதாவது: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 7 கல்லூரிகளில் நடைபெற்றுள்ளது. சுமார் 10,000 மாணவ மாணவிகளுக்கு முகாம்கள் மூலம் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 78 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 13648 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் [...]

+2 பொதுத்தேர்வு, வினாத்தாள் மையங்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு – ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மார்ச் 2013-இல் நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசுப்பள்ளிகள் 6 அரசு உதவி பெறும் பள்ளிகள் 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், ஒரு சமூக நலத்துறை பள்ளி, 29 சுயநிதி பள்ளிகள், 58 மெட்ரிக் பள்ளிகள் என 175 பள்ளிகளைச் சார்ந்த 31,367 மாணவ மாணவிகள் [...]
error: Content is protected !!