நாமக்கல்911 Videos

ரூ.1கோடி நிலம் மோசடி வழக்கு : கைதான தி.மு.க.செயலாளர் சேலம் சிறையில் அடைப்பு

சேலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கமலம் (வயது 38). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு முத்துசாமியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். தனக்கு சொந்தமாக  13 ஏக்கர் நிலம் மல்லியகரை அருகில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜா (வயது 44), கீரிப்பட்டி செல்வம் என்கிற தமிழரசன் (வயது 40) ஆகியோரும், மேலும் சிலரும் ஆக்ரமித்து கொண்டனர். [...]

விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் உயர்தர காதொலி கருவி–காது கேளாத மாணவர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக காதுகேட்கும் திறன் குறைந்த மாணவ மாணவிகளுக்கு உயர்தர காதொலி கருவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.குமரகுருபரன் தலைமையேற்று 20 மாணவ மாணவியர்களுக்கு உயர்தர காதொலி கருவி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் அவர்களின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமான பள்ளியில் படிக்கின்ற மாணவ [...]

நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் தாய் சாவு – விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை

நாமக்கல், நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் தாய் பரிதாபமாக இறந்தார்.அப்போது அவரது உற வினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. நாமக்கல் அருகே உள்ள அலங்கா நத்தம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்த மான செங்கல் சூளையில் வேலை பார்த்து வருபவர் தணிகாசலம் (வயது 35). இவரது மனைவி குட்டியம்மா (25). நேற்று முன்தினம். நிறைமாத கர்ப்பிணியான அவர் வயிற்றுவலியால் துடித்தார். அதை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அதை தொடர்ந்து [...]

கலெக்டர் அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் மனுக்கள் பதிவு செய்யும் மையம் – கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் மனுக்களை கணினியில் பதிவு செய்யும் மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி, இராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் கணினி மூலம் பதிவு செய்யும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் அனைத்தும் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்புகை சீட்டும் வழங்கப்படுகிறது. அதேபோன்று [...]

பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை நாமக்கல் மாணவிகள் பெற்று சாதனை

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மூன்று மாணவிகள் முதல் மூன்று ரேங்குகள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். சென்னை டி.பி.ஐ. அலுவலக வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் தேர்வு [...]

சேந்தமங்கலத்தில் லாட்டரி விற்ற மூவர் கைது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் உத்திரவுபடி நாமக்கல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ், தலைமை காவலர்கள் பாஸ்கர் மற்றும் ரவி அடங்கிய தனிப்படையினர் சேந்தமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது சம்மந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று 01.08.2012-ஆம் தேதி அதிரடி சோதனை செய்ததில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சேகர்(29), சக்திவேல் (54), மாணிக்கம் (62), ஆகியோர்களை [...]

காரைக்குறிச்சிபுதூரில் கிராமசபை கூட்டம் – கலெக்டர் பங்கேற்பு.

காரைக்குறிச்சிபுதூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஜெ.குமரகுருபரன் கலந்து கொண்டு கோரிக்கை மனு பெற்றார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் காரைக்குறிச்சிபுதூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஜெ.குமரகுருபரன் கலந்து கொண்டு பேசியதாவது:- காரைக்குறிச்சிபுதூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசய பொருட்கள் முறையாக கிடைத்திட வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்காக இந்த ஊராட்சியில் வடக்கு மாரியம்மன் கோவில், நந்தவன நகர் பாரிநகர் ஆகிய மூன்று இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு [...]

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்.

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாமக்கல் மாவட்டத்தில் குறைவான அளவே காணப்படுகிறது.இதுவரை 8 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தற்பொழுது மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிப்பதற்கு புதியதாக கூடுதல் இயந்திரங்கள் வாங்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் கொசு [...]

எலச்சிபாளையம் வட்டாரத்தில் கலெக்டர் ஆய்வு.

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் சத்திநாயக்கன்பாளையம் மற்றும் புஞ்சைபுதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டப்படாத வீடுகளின் பயனாளிகளை கலெக்டர் டி.ஜகந்நாதன் நேரில் சந்தித்து, கழிப்பிடங்களை விரைந்து கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களை சந்தித்து உடன் பணிகளை முடிக்க அறிவுரை வழங்கினார். அதன்பின்பு எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியப் பணிமேற்பார்வையாளர்களிடம் அரசு திட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டியது தொடர்பான பணிகுறித்த பதிவேடுகளை [...]
error: Content is protected !!