நாமக்கல்900 Videos

குட்கா, பான்மசாலா விற்றால் கடை உரிமம் ரத்து – ஆட்சியர் எச்சரிக்கை.

குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியமரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், ஆயூஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் அறிமுகம்.

நாமக்கல் மாவட்டத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ஆயூஸ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கிராமப்புற பொது சேவை மைய நிர்வாகிகளுக்கும் இத்திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. வரும் 25 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவரும் சேர்ந்து பயனடையலாம். இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும்.இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள மத்திய அரசின் பொது சேவை [...]

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள     கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் சிறப்பு விற்பனை தொடங்கியது. நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் துவக்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் – ஆட்சியர் தலைமையில் நடந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தார்.

அரசு பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு எதிர்ப்பு- ஆசிரியர்கள் போராட்டம்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை பயிற்சி அளித்து வருகிறது.

எருமப்பட்டி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரி கட்டணங்களைஒ பல மடங்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்து மக்கள் கட்சி, விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடந்தது.

காவிரி கரை ஓரம் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஜேடர்பாளையம் பரமத்திவேலூர் உள்ளிட்ட காவிரி ஆற்றுக் கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
error: Content is protected !!