பரமத்தி-வேலூர்82 Videos

ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு – போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் , தனியார் பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் ரூ 17,500 திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள காந்தமலை முருகன் கோயில் அருகே வசித்து வந்தஜோதிடர்  ரங்கநாதன் மற்றும் அவருடன் வசித்து வந்த மணி(எ) வளர்மதி ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 29 ம் தேதி மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இக் கொலை சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இக்கொலை தொடர்பாக ரங்கநாதனின் சகோதரி சந்திரா மற்றும் காட்டுபுத்தூரைச் சேர்ந்த [...]

பரமத்தி டிஎஸ்பி அலுவலகத்தை மின் வாரிய ஊழியர்கள் முற்றுகை.

பரமத்தி வேலூரில், கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியரை விடுவிக்க கோரி, டிஎஸ்பி அலுவலகத்தை மின்வாரிய  ஊழியர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் உத்தரவின்படி நாமக்கல் தனிப்படை போலீசார் கடந்த 22 ம் தேதி காலை பரமத்தி வேலூரில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். இதில் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில், காய்கறி கடையருகே நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் [...]

மோகனூர் ஜோதிடர் மற்றும் பெண் கொலை வழக்கு – இருவர் கைது

மோகனூர் அருகே ஜோதிடரும் அவருடன், மனைவியாக வாழ்ந்து வந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் மாவட்ட ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(50) ஜோதிடம் மற்றும் மாந்திரீக தொழில்செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இதே பகுதியைச் சேர்ந்தவர் மணி(எ) வளர்மதி(45) திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கும் ரங்கநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பழகி வந்ததற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ரங்கநாதனும், வளர்மதியும் [...]

பரமத்தி வேலூர் அருகே ஐந்து மணல் லாரிகள் சிறைபிடிப்பு

ப.வேலூர் அருகே அரசு விதிமுறையை மீறி, அரசு மணல் குவாரியில் மணல் அள்ளிச் சென்ற, ஐந்து லாரிகளை, கிராம விவசாயிகள் சிறைபிடித்தனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.இந்த மணல் குவாரியிலிருந்து அரசு அனுமதித்துள்ள அளவிற்கும் மேல் மணல் அள்ளப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், ஆற்றை ஒட்டிய கரையோர பகுதியில், நிலத்தடி நீர் வெகுவாக குறையும் சூழல் [...]

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர் திருடிய மூவர் கைது.

பாண்டமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை டிஸ்குகளுடன் திருடிய மூன்று பேரை பரமத்திவேலூர் போலீசார்  கைது செய்தனர். 

கூட்டுறவு சங்கம் மூலம் வாழைத்தார் விற்பனை – அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் வேலூர் நகர கூட்டுறவு வங்கியில் குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்ட தலைமை அலுவலகத்தின் தரைத்தளம் திறப்பு விழா மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழைத்தார் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் புதிய பேருந்து நிலையம் – தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்டம் வேலூர் தேர்வு நிலைய பேரூராட்சியில் ரூ.192.90 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார்.

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர்கள் திருட்டு

பரமத்தி வேலூர் அருகே, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 7 லாரி டயர்கள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான சிமெண்ட் குழாய் கம்பெனி பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டு புதூரில் உள்ளது. அங்கு மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் டிப்பர் லாரி ஒன்றை சண்முகம் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை [...]
error: Content is protected !!