பரமத்தி-வேலூர்88 Videos

மோகனூர் பகுதியில் பலத்த காற்றில் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம் – விவசாயிகள் கவலை

மோகனூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய பலத்த காற்றில் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் தாருடன் முறிந்து நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் தற்போது குலை தள்ளிய நிலையிலும், காய்கள் திரண்டு முற்றிய நிலையிலும், இன்னும் சில வாரத்தில் காய் வெட்டும் நிலையிலும் உள்ளன. மோகனூர் பகுதியில் கடந்த 2 நாட்கள் இரவு நேரத்தில் அடித்த [...]

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் நகை பறிப்பு

பரமத்தி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகளிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் கமலம் (45). இவர் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை செல்வி (40). இவர் நாமக்கல் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கமலமும், செல்வியும் கபிலர்மலையில் இருந்து நாமக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பரமத்தி தனியார் கல்லூரி அருகே [...]

பரமத்தி வேலூர் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள காந்தமலை முருகன் கோயில் அருகே வசித்து வந்தஜோதிடர்  ரங்கநாதன் மற்றும் அவருடன் வசித்து வந்த மணி(எ) வளர்மதி ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 29 ம் தேதி மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இக் கொலை சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இக்கொலை தொடர்பாக ரங்கநாதனின் சகோதரி சந்திரா மற்றும் காட்டுபுத்தூரைச் சேர்ந்த [...]

பரமத்தி வேலூர் அருகே முதியவர் படுகொலை. நகை,பணம் திருட்டு.

பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகேயுள்ள புங்கம்பாளையத்தில் முதியவரை கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயி. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று மதியம் வீட்டின் முன்பு இருந்த கட்டிலில் படுத்திருந்தார். மதியம் சுமார் 1.30 மணியளவில் மகன் ரங்கசாமி (54) தனது தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் [...]

திண்டுக்கல் போலீசாரை சுற்றி வளைத்த நகைகடை உரிமையாளர்கள்,பரமத்தி வேலூரில் பரபரப்பு

பரமத்தி வேலூர், பரமத்தி வேலூரில் நேற்று காலை விசாரணைக்கு வந்த திண்டுக்கல் போலீசாரின் காரை தங்க நகை கடை உரிமையாளர்கள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர்ராஜ். இவரது மகன் தனபால் (வயது 26). இவரை திண்டுக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் நகைகளை திருடி பரமத்தி வேலூரில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று காலை திண்டுக்கல் டவுன் போலீஸ் [...]

பரமத்திவேலூர் அருகே ஒரு லட்சம் மதிபுள்ள கரும்புகள் தீயில் எரிந்து நாசம்

பரமத்திவேலூர் அருகே உள்ள ஒலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் நடராசன், செல்லப்பன், காளியப்பன் இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் ஒலப்பாளையத்தில் உள்ளது.  கரும்பு பயிர்கள் செய்திருந்தனர்.  இந்த கரும்புகள் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வெட்டுவதற்காக தயார் நிலையில் இருந்தது.  நேற்று முன் தினம் கரும்பு தோட்டத்தின் மேலே சென்ற மின்கம்பி ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் தீ பற்றிக் கொண்டது. கரும்பு தோட்டம் முழுவது தீப்பற்றி எரிந்தது. இது குறித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள [...]

காவிரி ஆற்றிலிருந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை.

பரமத்திவேலூரை அடுத்த, ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி ராட்சத மின் மோட்டார் மூலம், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து வந்த நீர் உந்து நிலையங்களை பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்தனர். பருவ மழை பொய்த்ததால் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் காவிரி ஆறு தற்பொழுது வறண்டு காணப்படுகிறது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் குடிநீருக்காக மட்டுமே தற்பொழுது தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந் நிலையில், விவசாயிகள் காவிரி [...]

குடிநீர்கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை – காலிகுடங்களுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

பரமத்தி வேலூர் தாலுகா அண்ணாநகர் அருகே உள்ள எஸ்.கே.மேட்டூர் பகுதியில் சரிவர குடி நீர் வாராததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.கே.மேட்டூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லையாம். மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள நீர் தேக்கத்தொட்டி பல வருடங்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் இங்கு போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் இயங்கவில்லை. இதனால் அப்பகுதியைச் [...]

பரமத்திவேலூரில் ரேசன் அரிசி கடத்தல் – 2 பேர் கைது

பரமத்தி அருகே ஒரு டன் ரேசன் அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பரமத்திவேலூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் தலா 25 கிலோ எடையுள்ள 40 மூட்டைகளில், ஒரு டன் ரேசன் அரிசி உரிய ஆவணங்கள் [...]
error: Content is protected !!