பரமத்தி-வேலூர்88 Videos

மோகனூர் அருகே, அதிகாலையில் பெண்ணிடம் 6 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு.

மோகனூர் அருகே, அதிகாலை நேரத்தில் வீட்டு மாடிப்படியில் பதுங்கி இருந்து கால்நடை மருத்துவக்கல்லூரி பெண் ஊழியரிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அணியாபுரம் ஏ.சி.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 55). இவரது மனைவி பழனியம்மாள் (50). இருவரும் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு பழனியம்மாள் வீட்டுக்கு வெளியே இருந்த கழிவறைக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் வீட்டின் உள்ளே [...]

பரமத்திவேலூரில் போக்குவரத்து விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்.

பரமத்தி வேலூர்  நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் நேற்று நடத்திய வாகன தணிக் கையில் போக்குவரத்து விதிமுறை மீறி இயங்கிய பல்வேறு வாகனங்களுக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. நாமக்கல் வட்டார போக்கு வரத்து அலுவலர் ரஜினிகாந்த் ஆலோசனையின் படி, பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி தலைமையில் வாகன சோதனை மேற் கொள்ளப்பட்டது. பரமத்தி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடத்திய இந்த சோதனையில் ஆந்திர மாநிலம் ஹைதராபத்தில் இருந்து திருப்பதி [...]

மோகனூரில் வேலைவாய்ப்பு திறன் ஊக்குவிப்பு விழிப்புணர்வு முகாம்- ஆட்சியர் தகவல்.

தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன்விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் நோக்கங்களை நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை நிறைவேற்றி வருகிறது – கலெக்டர் பெருமிதம்.

நாமக்கல், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட சாதனை விளக்க கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.குமரகுருபரன் துவக்கி வைத்து பேசியதாவது:  தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளின் மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது தமிழக அரசின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் நாமக்கல் மாவட்ட [...]

முட்டை லாரி மோதி கல்லூரி மாணவர் பலி.

மோகனூர் அருகே முட்டை லாரியும், டூவீலரும் மோதியக் கொண்ட விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிவேல் (21). கிருஷ்ணகிரி மாவட்டம், பாண்டபலியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சதீஷ்குமார் (21). இவர்கள் இருவரும் மோகனூர், அணியாபுரம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தனர். இருவரும் நாமக்கல்-சேலம் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில், நேற்று [...]

நாமக்கல் மாவட்டத்தில் 36,856 விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்.

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநத்தம், போக்கம்பாளையம், அணிமூர்,சுள்ளிபாளையம், கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 2480 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும்  மின்விசிறி ஆகியவற்றை வழங்கும் விழா கலெக்டர்  ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான திட்டம் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும்  மின்விசிறி வழங்கும் திட்டமாகும். ஆதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 36856 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் [...]

ஜீப் மோதி வாலிபர் பலி.

மோகனூர் அடுத்துள்ள ஆரியூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவர் செவ்வாய்க்கிழமை மாலை நடுப்பட்டியில் இருந்து அணியாபுரம் நோக்கிச் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த ஜீப் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர் திருடிய மூவர் கைது.

பாண்டமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை டிஸ்குகளுடன் திருடிய மூன்று பேரை பரமத்திவேலூர் போலீசார்  கைது செய்தனர். 

நன்செய் இடையாறு மகா மாரியம்மனுக்கு 5008 பால்குட அபிஷேகம்

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று 5008 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-ம் வெள்ளிக்கிழமை 5008 பால்குட அபிஷேகம், 1008 குத்துவிளக்கு பூஜை, 108 கலச அபிஷேகம் மற்றும் அம்மன் பரிசலில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடை பெறுவது வழக்கம். விழாவை [...]
error: Content is protected !!