பரமத்தி-வேலூர்88 Videos

அடித்து உதைத்ததால் மனைவி இறந்ததாக நினைத்து கணவர் தூக்குபோட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூரில் மனைவியை அடித்து உதைத்த கணவர், மனைவி இறந்து விட்டதாக நினைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது42). இவருக்கும் குமுதா என்ற பெண்ணுக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவருக்கும் சில நாட்களாகவே குடும்பத்தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சிவானந்தத்திற்கும், அவரது மனைவி குமுதா விற்கும் [...]

அனுமதியின்றி செயல்பட்ட எரிவாயு குடோனிலிருந்து, 777 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்- ஐந்து பேர் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் அனுமதியின்றி இயங்கி வந்த சமையல் எரிவாயு குடோனிலிருந்து 777 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியர் டி.ஜகந்நாதன் உத்தரவின் பேரில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவிதா தலைமையில், வட்டாட்சியர் முத்துசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து [...]

ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு – போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் , தனியார் பள்ளி ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் ரூ 17,500 திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 16 பேர் பரமத்தி அழைத்துவரப்பட்டனர்.

கேரளா வழியாக ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற பரமத்தி வேலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேரந்த 16 பேர் மீட்கப்பட்டு, வருவாய்துறை அதிகாரிகள் மூலம் மீண்டும் பரமத்தி அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 12 பேர்களும். பதிவு செய்யப்படாத நான்கு பேர் என 16 பேர்கள் கடந்த ஜூன் 3-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல கேரளா [...]

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் நகை பறிப்பு

பரமத்தி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகளிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் கமலம் (45). இவர் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை செல்வி (40). இவர் நாமக்கல் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கமலமும், செல்வியும் கபிலர்மலையில் இருந்து நாமக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பரமத்தி தனியார் கல்லூரி அருகே [...]

இலங்கை அகதிகள் முகாமில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – கலெக்டர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஜெ.குமரகுருபரன்  தலைமையேற்று முதியோர் உதவித்தொகை, ஓட்டுநர் உரிமம், விதவை உதவித்தொகை, பட்டியலில் பெயர் சேர்த்தல், மருத்துவ உதவி, மகப்பேறு நிதியுதவி, விலையில்லா அரிசி, மற்றும் பிற உதவிகள் கேட்டு 56 மனுக்கள் பெற்றும், 12 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை பெறும் வகையில் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கி பேசியதாவது: தமிழக அரசு தமிழர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் [...]

கந்தம்பாளையம எஸ்.கே.வி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது  சரியான நேரத்தில் தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, தேர்வு துவங்கப்பட்டதா என்பதையும், தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, தேர்வு மையத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுட்டுள்ளார்களா என்பதையும், தேர்வு மையத்திற்கு உரிய காவல் பாதுகாப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் தேர்வு முடியும் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

கபிலர்மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் – கலெக்டர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 188 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு 810 மாற்றுத்திறனாளிகள் வருகை தந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகின்ற வகையில் 187 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 188  மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து [...]
error: Content is protected !!