பரமத்தி-வேலூர்87 Videos

நாமக்கல் மாவட்டத்தில் 36,856 விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்.

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநத்தம், போக்கம்பாளையம், அணிமூர்,சுள்ளிபாளையம், கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 2480 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும்  மின்விசிறி ஆகியவற்றை வழங்கும் விழா கலெக்டர்  ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான திட்டம் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும்  மின்விசிறி வழங்கும் திட்டமாகும். ஆதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 36856 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் [...]

ஜீப் மோதி வாலிபர் பலி.

மோகனூர் அடுத்துள்ள ஆரியூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவர் செவ்வாய்க்கிழமை மாலை நடுப்பட்டியில் இருந்து அணியாபுரம் நோக்கிச் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த ஜீப் ஒன்று அருண்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர் திருடிய மூவர் கைது.

பாண்டமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை டிஸ்குகளுடன் திருடிய மூன்று பேரை பரமத்திவேலூர் போலீசார்  கைது செய்தனர். 

நன்செய் இடையாறு மகா மாரியம்மனுக்கு 5008 பால்குட அபிஷேகம்

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று 5008 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-ம் வெள்ளிக்கிழமை 5008 பால்குட அபிஷேகம், 1008 குத்துவிளக்கு பூஜை, 108 கலச அபிஷேகம் மற்றும் அம்மன் பரிசலில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடை பெறுவது வழக்கம். விழாவை [...]

பதிவேடுகளை முறையாக பராமரித்திட வேண்டும் – அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அலுவலகத்திலுள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் வகையில் வருகைப் பதிவேட்டை வைத்து ஒவ்வொரு பணியாளராக அழைத்து ஆய்வு மேற்கொண்டார். வருகைப் பதிவேட்டில் முகாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த அலுவலர் எங்கு முகாம் சென்றுள்ளார். என்ன பணிக்காக சென்றுள்ளார் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். விடுப்பு என்றிருந்தால் அந்த பணியாளர் விடுப்புக் கடிதம் அளித்துள்ளாரா, முறையாக ஊராட்சி [...]

மோகனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் – கலெக்டர் பங்கேற்பு

மோகனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.குமரகுருபரன் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக 15 வட்டாரங்களிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு இதுவரை பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பரமத்தி, கபிலர்மலை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு அந்த முகாம்களுக்கு வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். [...]

வேலா ஸ்மெல்ட்லர்ஸ் நிறுவன விபத்து மேலும் இரு தொழிலாளர்கள் பலி, உரிமையாளரை தேடுகிறது போலீஸ்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கவுண்டிபாளையம், தொட்டியன் தோட்டம்  பகுதியில் வேலா  டிஎம்டி என்ற முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இங்கு  பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி தொழிற்சாலை இரும்பு உருக்கும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்நான்னன் மகன் வினோத்ராய்(45), ஒடிசா மாநிலம் போந்தலா மாவட்டத்தை சேர்ந்த கப்பிரியாபோதாம் பகுதியைச் சேர்ந்த் கான்கூ [...]

கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை மற்றும் கடன் அனுமதி ஆணை – கலெக்டர் வழங்கினார்.

   நாமக்கல் மாவட்டம் பரமத்தி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் மத்திய அரசின் கைத்தறி அபிவிருத்தி ஆணையத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் டி.ஜகந்நாதன் முகாமை துவக்கி வைத்து 64 நெசவாளர்களுக்கு கடன் அட்டை மற்றும் கடன் அனுமதி ஆணை வழங்கி விழாவில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 64 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் 12,173 உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்த உறுப்பினர்களில் [...]

பரமத்தி அருகே பஸ்கள் மோதல்: 5 பேர் காயம்.

பரமத்தி வேலூர் வட்டம் கீரம்பூர் அருகே ரோட்டில் பழுதடைந்து நின்ற பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். கீரம்பூர் அருகே நாமக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பஸ் ஒன்று திடீரென பழுதாகி ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பஸ் பழுதடைந்து நின்ற பஸ் மீது மோதியது. இதில், பேருந்தில் வந்த நடத்துனர் [...]

செ.புதுப்பாளையத்தில் மனுநீதிநாள் முகாம் 90 பயனாளிகளுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கோலாரம், இராமதேவம், செருக்கலை, ஆகிய ஊராட்சிகளை ஒன்றினைத்து செ.புதுப்பாளையத்தில் மனுநீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை வீட்டுமனைப்பட்டா ஆக்கிரமிப்பு அகற்றுதல், கடனுதவி, புதிய குடும்ப அட்டை கேட்டு சுமார் 125 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு வழங்கி ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் வருவாய்த்துறையின் மூலம் 73 [...]
error: Content is protected !!