பரமத்தி-வேலூர்88 Videos

பரமத்தி வேலூர் அருகே ஐந்து மணல் லாரிகள் சிறைபிடிப்பு

ப.வேலூர் அருகே அரசு விதிமுறையை மீறி, அரசு மணல் குவாரியில் மணல் அள்ளிச் சென்ற, ஐந்து லாரிகளை, கிராம விவசாயிகள் சிறைபிடித்தனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் அரசு மணல் குவாரி செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.இந்த மணல் குவாரியிலிருந்து அரசு அனுமதித்துள்ள அளவிற்கும் மேல் மணல் அள்ளப்படுவதாக இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், ஆற்றை ஒட்டிய கரையோர பகுதியில், நிலத்தடி நீர் வெகுவாக குறையும் சூழல் [...]

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர் திருடிய மூவர் கைது.

பாண்டமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை டிஸ்குகளுடன் திருடிய மூன்று பேரை பரமத்திவேலூர் போலீசார்  கைது செய்தனர். 

கூட்டுறவு சங்கம் மூலம் வாழைத்தார் விற்பனை – அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் வேலூர் நகர கூட்டுறவு வங்கியில் குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்ட தலைமை அலுவலகத்தின் தரைத்தளம் திறப்பு விழா மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழைத்தார் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் புதிய பேருந்து நிலையம் – தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்டம் வேலூர் தேர்வு நிலைய பேரூராட்சியில் ரூ.192.90 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார்.

பரமத்தி வேலூர் அருகே லாரி டயர்கள் திருட்டு

பரமத்தி வேலூர் அருகே, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 7 லாரி டயர்கள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான சிமெண்ட் குழாய் கம்பெனி பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டு புதூரில் உள்ளது. அங்கு மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் டிப்பர் லாரி ஒன்றை சண்முகம் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை [...]

பரமத்தி வேலூரில் வெள்ளைக்கொடி வெற்றிலை விலை வீழ்ச்சி.

பரமத்தி வேலூரில், வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளைக்கொடி வெற்றிலையின் விலை சுமை ஒன்றுக்கு ரூ.1,500 வரை குறைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொத்தனூர், வேலூர், பாண்டமங்கலம், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பொய்யேரி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் சேலம், மதுரை, கோவை, ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் [...]

காவிரி ஆற்றிலிருந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை.

பரமத்திவேலூரை அடுத்த, ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி ராட்சத மின் மோட்டார் மூலம், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து வந்த நீர் உந்து நிலையங்களை பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்தனர். பருவ மழை பொய்த்ததால் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் காவிரி ஆறு தற்பொழுது வறண்டு காணப்படுகிறது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் குடிநீருக்காக மட்டுமே தற்பொழுது தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந் நிலையில், விவசாயிகள் காவிரி [...]

பரமத்திவேலூர் அருகே விபத்து, சிமென்ட் தடுப்பில் கார் மோதி இருவர் பலி.

பரமத்திவேலூர் அருகே பை பாஸ் ரோட்டில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த சிமென்ட் தடுப்புகள் மீது மோதிஅ விபத்துக்குள்ளானதில் கார் டிரைவர் மற்றும் திருத்தணியைச் சேர்ந்த வெல்லம் வியாபாரியும் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் காரில் பயணம் செய்த 3 வியாபாரிகள் படுகாயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் சம்பத் (50). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவசங்கர் (44), பாலாஜி (37), ஆனந்த் (45). அனைவரும் பலசரக்குகளை வாங்கி விற்கும் மொத்த வியாபாரிகள். மேற்கண்ட 4 [...]

மோகனூர் அருகே பயணிகள் ரயில் மோதி முதியவர் பலி.

மோகனூரை அடுத்த சின்ன பெத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமன்(எ) தாதன்(72)  ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி.இவருக்கு காதுகள் இரண்டும் கேட்காது எனக் கூறப்படுகிறது.இவர் நேற்று காலை சின்ன பெத்தாம்பட்டி ரயில்வே தரைப்பாலம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது அந்த வழியாக கரூரிலிருந்து சேலம் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனை கவனிக்காத ராமன் தண்டவாளத்தை கடந்தாராம்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக ராமன் மீது பயணிகள் ரயில் மோதியது.இந்த விபத்தில் ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ராமனுக்கு சரிவர [...]
error: Content is protected !!