Breaking News642 Videos

திருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எம்.எல்.ஏ பொன்சரஸ்வதி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்

திருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தீயணைப்புத் துறை சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

தீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.

திருச்செங்கோடு அடுத்த 85 கவுண்டம்பாளையம் பஞ்சாயத்து திம்மராவுத்தம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செங்கோடன் கூலித் தொழிலாளி . இவரது  குடிசை வீடு  மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.  இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு  எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி  தீவிபத்து ஏற்பட்ட வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிவாரண உதவியாக ரூ.5000 மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு தாசில்தார் சுப்ரமணியம், நிலவள வங்கித் தலைவர் சக்திவேல், அதிமுக ஊராட்சி கழக செயலாளர் பாலகிருஷ்ணன், மேட்டுபாளையம் [...]

கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.

திருச்செங்கோட்டில் இருந்து கஜா புயலால் பாதிப்படைந்த மன்னார்குடி பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக திருச்செங்கோடு,குமாரபாளையம், எடப்பாடி மற்றும் மேட்டூர் நகராட்சிகளில் இருந்து 30 துப்புரவு பணியாளர்கள், ஒரு துப்புரவு ஆய்வாளர், மூன்று துப்புரவு மேற்பார்வையாளர்கள் என 34 பேர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நிவாரண பணிகளுக்குச் சென்ற ஊழியர்களை நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலர் வேலாயுதம், துப்புரவு அலுவலர் அரசகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.

கஜ புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

தமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில்  வரும் 18.11.2018 தேதி ரூ.486 கோடி மதிப்பிலான குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய தொகுதி மக்கள் பயனடையும் வகையிலான கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான நிகழ்ச்சி மேடை திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைக்கப்படுகிறது. மேடை அமைப்பதற்காக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா திருச்செங்கோடு [...]

சாலை ஓர கிணற்றில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் சாவு.

திருச்செங்கோடு அடுத்த கொன்னையார்,அக்கரைபட்டியான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (எ) ரங்கசாமி(65) கூலித் தொழிலாளி. நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் அடுத்த ஆயித்தாக்குட்டை, ஒடுவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் தனது இருசக்கர வாகனத்துடன் சாலை ஓரமாக இருந்த 85 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரங்கசாமி கிணற்றுக்குள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் [...]
error: Content is protected !!