Breaking News405 Videos

கல்விக்காக திருவிழா நடத்திய பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூர் அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ப்ளஸ்டூ பொதுத் தேர்வு, திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

 ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் திருச்செங்கோடு வித்யாவிகாஸ் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பிரிவு மாணவன் 1179 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் பள்ளியில் 200க்கு 200 மதிப்பெண்கள்  74 மாணவர்களும், 1170 மதிப்பெண்களுக்கும் மேல் 13 மாணவர்களும், 1150 மதிப்பெண்களுக்கும் மேல் 47 மாணவர்களும்,1100 மதிப்பெண்களுக்கும் மேல் 225 மாணவர்களும், 1000 மதிப்பெண்களுக்கும் மேல் 705 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, [...]

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும், செல்லாது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு. செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு. இரு நீதிபதிகளின் வெவ்வேறான தீர்ப்புகளை அடுத்து மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.30.09.2017 அன்று நீதிபதி துரைசாமி வழங்கிய இடைக்கால தீர்ப்பு நீடிக்கும். சபநாயகரின் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என நீதிபதி இந்திரா பானர்ஜி [...]

திருச்செங்கோடு அருகே இரவு நேரத்தில் பறக்கும் மர்ம விமானங்களால் பொதுமக்கள் பீதி.

உலக மக்களின் மனம் கவர்ந்த சிறந்த செல்போன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மொளசி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிய வகையைச் சேர்ந்த மர்ம விமானங்கள் இரவு நேரங்களில் பறப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும்பீதியில் உள்ளனர்.

மத்திய அரசின் அடிப்படை கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்று –ஆட்சியர் வழங்கினார்.

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் என்ற மத்திய அரசின் அடிப்படை கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

ஜூலை 20, அகில இந்திய லாரிகள் வேலை நிறுத்தம்- தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு.

  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு அவசர பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகப்பா முன்னிலை வகித்தார். பொதுக்குழுக் கூட்டத்தில் சேலம், சங்ககிரி, ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தற்போது லாரி தொழிலில் உள்ள பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு லாரிகளுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு [...]

திருச்செங்கோடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் நேரில் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இசிஇ படித்தும் வரும் மாணவர் ஒருவரை ஹாஸ்டல் வார்டன் சராமாரியாக தாக்கியதால் உடல் முழுவதும் காயங்களுடன் மாணவர் இருப்பதை போன்ற புகைப்படம் மற்றும் அது தொடர்பாக மற்றொரு மாணவர் பேசிய ஆடியோ ஆகியவை வாட்சாப் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரப்படுகிறது. இது தொடர்பாக திருச்செங்கோடு தாசில்தார் சுப்பரமணி சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவர் கல்லூரி [...]

திருச்செங்கோடு, ஆபத்துகாத்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடிமாத பிறப்பைமுன்னிட்டு , திருச்செங்கோடு ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் , சிறப்பு யாகங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது . விநாயகர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர் . அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

உயிரிப்பல்வகைமை பேணி பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்.

நாமக்கல் ,தனியார் ஓட்டலில் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று உயிரிப் பல்வகைமை சட்டம், 2002  அமுல்படுத்துதல், அணுகுதல் மற்றும் பயன்களை பங்கிடுதல்   தொடர்பான வழிமுறைகளை செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துக்கொண்ட பயிற்சி பட்டறை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் இப்பயிற்சி முகாமினைதொடங்கி  வைத்தார். இப்பயிற்சி பட்டறையில் சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு [...]
error: Content is protected !!