Breaking News591 Videos

எலச்சிபாளையத்தில் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இந்து சமய

 ப்ளஸ்டூ பொதுத்தேர்வு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

  ப்ளஸ்டூ பொதுத் தேர்வில்  திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் அங்கமான கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். 1179 மதிப்பெண்கள் பள்ளியின் முதலிடமாகவும்,1172 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், 1170 மதிப்பெண்கள் மூன்றாம் இடமும் மாணவர்கள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர்.                 பள்ளியில் தேர்வு எழுதிய 158 மாணவர்களில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் [...]

தியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான காலா திரைப்படம் நேற்று இரவு வெளிநாடுகளிலும் இன்று இந்தியாவிலும் வெளியானது.

திருச்செங்கோட்டில் ரவுடி கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த பல்வேறு வழக்குகளில்  தொடர்புடைய ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெப்படையில் தாலுகா அலுவலகம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் – ஒருவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம்  வெப்படையில் அமைக்க வேண்டியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெப்படை அரசு ஆரம்ப பள்ளி, வெப்படை அரசு மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையை சீர் செய்ய வலியுறுத்தியும் வெப்படை  துணை வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு காலவரையற்ற உண்ணனாவிரதம் இருந்த வெப்படை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.  முறையான அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததால் பாலகிருஷ்ணன் [...]

இந்திய மாணவர் சங்கம் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

நாமக்கல்லில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் போதையில்லா தமிழகம், விபத்தில்லா தமிழகம் என்ற தலைப்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

ரிக் இன்ஜினியரிங் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகம்

திருச்செங்கோடு இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழா சங்ககிரி ரோடு புள்ளிக்காரர் மில் வளாகத்தில் நடந்தது. பிஆர்டி நிறுவனங்களின் தலைவர் மற்றும் ரெஸ்கா கவுரவ தலைவர் டி.பி.தங்கராஜ் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்க நிர்வாகி பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார், ரிக் 68 ஆயில் விற்பனையை ரெஸ்கா தலைவர் மற்றும் பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன் தொடங்கி [...]

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு.

டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசிய மரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.

சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பள்ளிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக அரசை கண்டித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரி உட்பட 100 சதவீதம் வரை வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது.  இந்த வரி உயர்வால் ஏழை எளிய சாதாரண நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மீது வாடகை சுமை அதிகமாகும் நிலைமை ஏற்படும்           தமிழக அரசின் [...]
error: Content is protected !!