Breaking News595 Videos

ஆர்ப்பரித்துச் செல்லும் காவிரி

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் 9 மாவட்ட கரை ஓர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொழிலாளியின் தலையில் காயமின்றி மூளை அறுவை சிகிச்சை, திருச்செங்கோடு, விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியில் தொழிலாளி ஒருவருக்கு தலையில் காயமின்றி மூளையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.              தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவர் உசிலம்பட்டி  அரசு போக்குவரத்துக் கழக கேண்டீனில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடும் தலைவலி, தலைசுற்றல் மற்றும் மூக்கிலிருந்து  ஒருவகையான திரவம் வடிதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிப்படைந்தார். தமிழகத்தில் முக்கியமான பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.   இந்த நிலையில் நண்பர்களின் ஆலோசனையின்படி [...]

திருச்செங்கோட்டில் தொடர் செயின் பறிப்பு – 2 திருடர்கள் கைது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு உத்தரவின் பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் மேற்பார்வையில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் பால்மடை அருகே திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தின் அந்த இரண்டு பேர் போலீசாரை [...]

சிறுமிக்கு பாலியல் கொடுமை இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப் புலி கொளத்து வலவு பகுதியில் 3 1/2 வயது பெண் குழந்தையை நேற்று மதியம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த சுப்பிரமணி (17) (பெயர் மாற்றப் பட்டுள்ளது ) என்ற இளைஞர் போக்சோ என்னும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது எலச்சிபாளையம் போலீசார் நடவடிக்கை

மோகனூர் ஸ்ரீ நாவலடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

மோகனூர்  ஸ்ரீ நாவலடியான் கருப்பணார் கோயில் கும்பாபிஷேக விழா காட்சித் தொகுப்பு

தாமதமான தீர்ப்புகள் ஏழைகளை பாதிக்கும் – தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து.

நீதிபதிகள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் சட்டத்திற்கும், நியாயத்திற்கு உட்பட்டு தீர்ப்புகளை வழங்க வேண்டும் என நாமக்கல்லில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரத்ததான முகாம்.

நாமக்கல் மாவட்ட, காவல்துறை சார்பில் நாமக்கல்லில் இன்று காலை ரத்த தான முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமை வகித்தார். முகாமில் நாமக்கல் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் டாக்டர் .தனுபிரியா மற்றும் செவிலியர்கள், மருத்துவ குழுவினர் பங்கேற்று ரத்த தானம் பெற்றனர். முகாமில் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் 22 பேர், ஊர்காவல்படையினர் 17 பேர் என மொத்தம் 39 யூனிட் [...]

தற்கொலைக்கு முயன்ற காசாளர் மீது வழக்கு – ஐடி அதிகாரி நடவடிக்கை

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இரவு அந்நிறுவனத்தின் காசாளர் கார்த்திகேயனிடம் வருமானவரித்துறை அதிகாரி தயானந்த [...]

திருச்செங்கோடு அருகே கோயில்களில் திருட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அடுத்த சீத்தாராம்பாளையம் அருந்ததியர் தெரு பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் உண்டியல்களை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு. திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை.

ஜூலை.24 ல், திருச்செங்கோட்டில் மின் தடை.

நாமக்கல் மின்பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு 110/22கி.வோ, துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 24.07.2018 செவ்வாய்க்கிழமைகாலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணபாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிபட்டி, சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், அணிமூர், ஆண்டிபாளையம், ஏமபள்ளி, விட்டம்பாளையம், தோக்கவாடி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை மற்றும் கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என [...]
error: Content is protected !!