Breaking News157 Videos

தமிழக கவர்னர் 22 ம் தேதி திருச்செங்கோடு வருகை. கல்லூரி விழா, காந்தி ஆசிரம விழாக்களில் பங்கேற்பு.

தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி விழாவில் 22 ம் தேதி மாலை 4 மணிக்கு பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு காந்தியாசிரமத்தில் நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்று தேசிய கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

வங்கி ஏடிஎம் பின் நெம்பரை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் – எஸ்பி எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஏடிஎம் இயந்திரங்களில் ‘ஸ்கீமர்’ என்ற கருவியை பொருத்தி, வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை கண்டறிந்து, அதை வைத்து  போலி கார்டு தயாரித்து, பணம் திருடப்பட்டு வருகிறது. நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூர் மற்றும் வசந்தபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் மையங்களில் இதே முறையில் வாடிக்கையாளர்களின் பணம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  நாமக்கல் மாவட்ட எஸ்.பி அருளரசு  தெரிவித்துள்ளதாவது:- பல மாதமாக [...]

ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல், மேலும் இருவர் கைது

திருச்செங்கோடு சேலம் ரோட்டில் வசிப்பவர்   செங்கோட்டுவேல் (51). தொழிலதிபர். இவரது மூத்த மகன் ரித்தீஷ் எம்பிபிஎஸ் முடித்து விட்டு டாக்டராக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.  மர்ம மனிதர்கள் சிலர் செங்கோட்டுவேலுவிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டினர். தராவிட்டால்  அவரது டாக்டர் மகனை கடத்தி கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர். மேலும் பணத்தை திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் உள்ள ஒரு இடத்தி்ல் வைக்குமாறு கூறினர். தன்னால் ரூ.1 கோடி தர இயலாது [...]

நாமக்கல் வரும் கவர்னருக்கு எதிர்ப்பு, கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் – திமுக முடிவு.

நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது.. மாவட்டஅவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். திமுக மேற்கு மாவட்ட செயலாளரும்,பரமத்திவேலூர் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி முன்னிலை வகித்து தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளித்துபேசினார். கூட்டத்தில் துணைசெயலாளர்கள் சேகர், செல்வராஜ்,பொருளாளர் குமார்,தலைமைசெயற்குழு உறுப்பினர் யுவராஜ்,பொதுக்குழுஉறுப்பினர் செல்வராஜ்,அன்பழகன்,அம்பிகாபாண்டியன்,மாநிலஆதிதிராவிடர் நலக்குழு இணைசெயலாளர் மு.பரமானந்தம் , ஒன்றிய [...]

விலைவாசி உயர்வை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜகட்சி ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்

வெப்படையில் தாலுகா அலுவலகம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் – ஒருவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம்  வெப்படையில் அமைக்க வேண்டியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெப்படை அரசு ஆரம்ப பள்ளி, வெப்படை அரசு மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையை சீர் செய்ய வலியுறுத்தியும் வெப்படை  துணை வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு காலவரையற்ற உண்ணனாவிரதம் இருந்த வெப்படை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.  முறையான அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததால் பாலகிருஷ்ணன் [...]

குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் – வீடியோ கான்ப்ரஸ்சிங்கில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் விவசாயம்,விசைத்தறி, நூற்பு ஆலைகள் என பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் பகுதியில் விபத்து மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டால் திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணி செய்து வந்தனர். தொலைவில் இருந்து வருவதால் தாமதம் ஏற்பட்டு பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து குமாரபாளையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல [...]

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், 291 பயனாளிகளுக்கு பணி ஆணை- அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 291 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி முன்னிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் மற்றும் தமிழக அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி தொலைநோக்கு திட்டம் – 2023 –ன் படி திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பயனாளிகள் சுயமாக வீடு [...]

திருச்செங்கோடு அரசுப் பள்ளி மாணவருக்கு கவர்னர் விருது .

பாரத சாரண, சாரணீய இயக்கம் சார்பாக சிறப்பாக செயல்படும் சாரண மாணவர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் விருது (கவர்னர் விருது)ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவர் தரணிதரனுக்கு இந்த ஆண்டிற்கான இராஜ்யபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக கல்வி அமைச்சர் முன்னிலையில் , தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் இராஜ்ய புரஸ்கார் விருதினை மாணவர் தரணிதரனுக்கு வழங்கினார். கவர்னர் விருது பெற்ற மாணவர் தரணிதரன் [...]

திருச்செங்கோட்டில், சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்க வட்டக்கிளையின் சார்பில் நேற்று திருச்செங்கோடு உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு திருச்சி எஸ்.இ. மற்றும் புதுக்கோட்டை டி.இ ஆகியோர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வி.விவேகானந்தன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் எம்.சௌந்தரராஜன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட செயலர் எம்.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். கடந்த மாதம் 9 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோட்ட பொறியாளர் அலுவகம் முன்பு [...]
error: Content is protected !!