கல்வி & வேலைவாய்ப்பு126 Videos

மோகனூரில் வேலைவாய்ப்பு திறன் ஊக்குவிப்பு விழிப்புணர்வு முகாம்- ஆட்சியர் தகவல்.

தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன்விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்பட உள்ளது.

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை – ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. ஆசியா மரியம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நலத் திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தெரிவித்துள்ளதாவது:-

நாமக்கல்லில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்”; நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.07.2018 அன்று நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத்

சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்.

நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த இளைஞர்கள் அறிவது, இந்திய இராணுவத்திற்காக ஆள் சேர்ப்பு முகாம் 22 ஆகஸ்ட் 2018 முதல் 02 செப்டம்பர் 2018 வரை சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கீழ்காணும் (11) மாவட்டங்களிலிருந்து (கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் மட்டும்) தகுதி வாய்ந்த இளைஞர்கள் சோல்ஜர் டெக்னிக்கல் ,சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன் ஃ ஏவியேசன் சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்னட் , சோல்ஜர் [...]

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு.

டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசிய மரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.

+2 மற்றும் SSLC மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு ஆட்சியர் தகவல்.

  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaappu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற  தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தில் உதவியாளர் பணி. எம்.பி.சி பெண்களுக்கு வாய்ப்பு.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.அப்பணியிடத்திற்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மிதிவண்டி ஓட்டத்தெரிந்த 1.7.2018 அன்று 32 வயதுக்கு மிகாமல் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் அவர்களது விண்ணப்பம், கல்விச்சான்றுகள் மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் தபால் மூலமாக மட்டும் 31.07.2018-ற்குள் உதவி இயக்குநர், [...]

முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தில் இரவு காவலர் பணி வேலைவாய்ப்பு.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. அப்பணியிடத்திற்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த எழுதப்படிக்க தெரிந்த 01.7.2018 அன்று SCA, SC, ST-35 BC,  MBC -32> OC-30 வயதுக்கு மிகாமல் உள்ள நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் அவர்களது விண்ணப்பம், கல்விச்சான்றுகள் மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் தபால் மூலமாக மட்டும் 31.07.2018-ற்குள்  உதவி இயக்குநர், முன்னாள் படை [...]

ஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பணி வாய்ப்பு, இணையதளம், மூலம் விண்ணப்பிக்கலாம்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் 275 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant )  பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியுடையவர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி;ல் தெரிவித்துள்ளதாவது,   தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) [...]

அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை படிக்க ”டேப்” கணினி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் இணையத்தில் இருந்து பாடங்களை டவுன் லோடு செய்து படிக்கும் வகையில் அவர்களுக்கு டேப் கணினி வழங்கப்படும் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருச்செங்கோட்டில் தெரிவித்தார்.
error: Content is protected !!