ராசிபுரம்281 Videos

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.

ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனரிடம் உயர் நீதிமன்ற வக்கீல் என கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளுர் கேட்,கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சதாசிவம் (72), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார்.  ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 2014 ம் ஆண்டு சோலார் லைட் தொழிலுக்கு ரூ.55 லட்சம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்ப [...]

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் வீசப்பட்ட பெண் குழந்தை,போலீசார் மீட்பு.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையப் பகுதியில் பெற்றோரால் கவிடப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூபதி இன்று மாலை ரோந்து பணியை மேற்கொண்டிருந்தார். ராசிபுரம் பேருந்து நிலையப் பகுதியில் அவர் சென்ற போது பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அங்கு சென்ற எஸ் ஐ பூபதி விசாரணை நடத்திய போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பிறந்து 4 நாட்களே ஆன பெண் [...]

காக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

நாமக்கல் மாவட்டம்,காக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி, தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பொடியன்(எ) பெரியசாமி டிரைவராக பணி புரிந்து  வந்தார். இவரது மணைவி மணிமேகலை கூலிவேலை செய்து வருகிறார்.

ராசிபுரம் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராசி இன்டர்நேசனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வேன் ஒன்று சேந்தமங்கலம் பகுதியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் ராசிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வெள்ளக்கணவாய் பகுதி அருகே வந்த போது ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இச்சம்பவத்தில் கிளினர் சதிஸ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 15க்கும் பேற்ப்பட்ட மாணவ மாணவிகள் படுகாயமடைந்து ஆங்காங்கே உள்ள தனியார் [...]

கொழிஞ்சிப்பட்டி, பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 10 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயில் கும்பாபிஷேகம், 3 ஆயிரம் பேர் தீர்த்த குட ஊர்வலம்.

ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைஒட்டி தீர்த்தத குட ஊர்வலம் நடை பெற்றது. 3000க்கும்  மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் பெயர் ரேசன் கார்டில் நீக்கம்-போராட்டம் நடத்த முடிவு.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நாமக்கல் முதல் மாவட்ட  மாநாடு ராசிபுரத்தில் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

ராசிபுரம், மின்னல் தாக்கி வீடுகள், மின்சாதன கருவிகள் சேதம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதிகளில்  இரவு பலத்த இடியுடன் கனமழை  பெய்தது.சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையில் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வராஜ் என்பவரது வீட்டின் வாட்டர்டேங்க் மீது மின்னல் தாக்கியது. இதில் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா. டிவி. யூபிஎஸ். உள்ளிட்ட  மின்சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தது. அதேபோல் அதேவீதியி உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது மின்னல் தாக்கி மின்சாதனங்கள் சேதமடைந்த [...]

ராசிபுரம் கூட்டுறவு வங்கியில் ரூ.12 லட்சம் கையாடல் -14 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாச்சிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2014-ம் ஆண்டு வறட்சி நிவாரண தொகை ரூ.12 லட்சம் ரூபாய் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் தனவேல், முன்னாள் தலைவர் குமரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சகுந்தலா, கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பரமணி உள்ளிட்ட 14 பேரை நாமக்கல் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!