ராசிபுரம்281 Videos

நாமகிரிப்பேட்டை விவசாயி கொலை – மூவர் கைது

ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் விவசாயி வெட்டிக் கொலை செய்து கிணற்றில் வீசியதாக மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டி, குருவாலா தொப்பப்பட்டியார் தோட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகன் குணசேகரன் ( 36 ).இவர் கடந்த 20-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்பி சத்யாபிரியா உத்தவின் பேரில் விசாரணை நடத்திய நாமகிரிப்பேட்டை போலீஸாருக்கு அவரது கூட்டாளிகளான அணைப்பாளையம் ஜெகந்நாதன், விஸ்வநாதன், [...]

உணவுகளை நல்ல முறையில் சமைத்து வழங்கிட வேண்டும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை.

இராசிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழக முதலமைச்சர் அறிமுகப்படுத்தும் பல்வகை உணவுகள் தயாரிப்பது குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் கலெக்டர் டிஜகந்நாதன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக முதலமைச்சர் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு சத்தான சுவையான உணவுகள் தினந்தோறும் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வகை உணவுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப்பயிற்சியின் அடிப்படையில் [...]

மேட்டுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் விழா, எருமை கிடா வெட்டி நேர்த்தி கடன்.

ராசிபுரம்,மேட்டுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், எருமை கிடா பலியிட்டும், குண்டம் இறங்கியும் பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ராசிபுரம் அடுத்த மேட்டுக்காட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, பிப்ரவரி 5ந் தேதி பால்குடம் ஊர்வலத்துடன் துவங்கியது. முக்கீய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்து, அங்கு ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று(6ந் தேதி)  அதிகாலை 5 மணி முதல் பொங்கல் வைக்கும் [...]

சேலம் கரூர் ரயில்பாதையில் விரைவில் பயணிகள் ரயில் இயக்க கோரி நடைபயணம்

சேலம் நாமக்கல் அகல ரயில் பாதை திட்டபணிகள் பல ஆண்டு களுக்கு முன்பு துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று தற்போது சரக்கு ரயில்கள் இயக்கம் மற்றும் பயணிகள் ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க கோரியும், ஒரு வழிபாதையை இரு வழிபாதையாக மாற்ற கோரியும், மின்சார தொடர் வண்டி திட்டமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபயண போராட்டம் நடைபெற்றது. [...]

ராசிபுரம் அருகே ஆம்னி வேன் பாலத்தில் மோதி விபத்து – மூவர் பலி, ஐந்து பேர் படுகாயம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி(55) இவரும் இவரது குடும்பத்தினர் ஏழு பேரும் ஒரு ஆம்னி வேனில் நேற்று பழனி சென்றனர். வேனை கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(24) ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை சபாபதி குடும்பத்தினர் பழனியிலிருந்து ஆத்தூருக்குத் திரும்பி கொண்டிருந்தனர். ஆம்னிவேன் ராசிபுரத்தை அடுத்துள்ள மங்களாபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தரைப்பாலத்தில் மோதி சாலையின் ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் [...]

நாமகிரிப்பேட்டையில் சமத்துவ சமுதாய வளைகாப்பு – 30 கர்ப்பிணிகள் பங்கேற்பு.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 30 கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. திட்ட அலுவலர் மாலதி குத்துவிளக்கிகேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சுமங்கலி பெண்கள், சந்தனம் தடவி, குங்குமம் வைத்து கண்ணாடி வளையல் அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் தயாசங்கர், மருத்துவர் தீபா ஆகியோர் கலந்து கொண்டு பேருகால [...]

காக்காவேரியில் பெண்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

ராசிபுரம் ஒன்றியம் காக்காவேரியில் அனைவருக்கும் வேலைதிட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாக கூறி பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். கிராமப்பகுதிகளில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கில்  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வேலைசெய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதுடன் வருடத்தில் 100 நாட்கள் வேலையும் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கும்போது நாள் ஒன்றுக்கு ரூ.148 வரை கூலி வழங்கப்பட்டது. ஊராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய், ஏரிகளை தூர் வாருதல், பொது இடங்களை சுத்தம் [...]

ராசிபுரம் அருகே ரயில்மோதி வாலிபர் பலி- ரயில்வே காவல்துறையினர் விசாரணை

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் அவரது மகன் முருகேசன் இவர் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகேயுள்ள உடுப்பதாம்புதூர் பகுதியிலுள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை  அப்பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே முருகேசன் ரயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணேசன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு [...]

காக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

நாமக்கல் மாவட்டம்,காக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

பட்டணத்தில் நாள்தோறும் குறல் ஒலிபரப்பு

ராசிபுரம்,ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தில் அன்றில் நற்பணி மன்றம் சார்பில் நாள்தோறும் திருக்குறள் ஒலிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நாள்தோறும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு குறளும் அதற்கான விளக்கவுரையும் ஒலிபரப்பு செய்யப்படும். இதற்கான தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவை தொழிலதிபர்கள் பி.எஸ்.கருணாநிதி, கே.வைத்தியலிங்கம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பட்டணம் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.நல்லதம்பி தலைமை வகித்தார். பேராசிரியர் சி.ரத்தினம், [...]
error: Content is protected !!