ராசிபுரம்267 Videos

ராசிபுரம் அருகே தனியார் பேருந்துகள் மோதல் 20 க்கும் மேற்பட்டோர் காயம்.

சேலத்திலிருந்து துறையூர்  நோக்கி சென்ற தனியார் பேருந்தும் சேலத்திலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்தும் ராசிபுரம் அடுத்த சமத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது

ராசிபுரம் அருகே துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையம்பாளையம்  ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் அடிப்படைவசதி மற்றும் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து வலியுறுத்தி  100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி

கிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபளையத்தை சேர்ந்த இளஞ்செழியன், ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், இளங்கோ, குமரேசன் சிவபிரகாசம், நல்லசிவம், சந்திரசேகர் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் 1 ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிந்து வரும் சூழ்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியில்  சமூக சேவை செய்வதற்காக நண்பர்கள் [...]

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.

நாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம்

ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையில்  குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மூலச்சி பனங்காடு, பண்ணகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த காளியண்ணகவுண்டர் மகன் பெரியசாமி(70). இவரது மனைவி தாயம்மாள். இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகியதால் இருவரும் தனியாக வசித்து  வருகின்றனர். பெரியசாமி வயலில் குடிசைவீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றிருந்தபோது குடிசை வீட்டில் தீ பிடித்துக்கொண்டது. இது [...]

ராசிபுரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்கேற்பு.

ராசிபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. தமிழகத்தில் பருவ மழை குறைந்து நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் பலவேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால் நீலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.  இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பாக துவங்கிய பேரணியை நகர்மன்ற தலைவர் .பாலசுப்பிரமணியம் கொடியசைத்து [...]

ராசிபுரம் அருகே போலி டாக்டர்கள் இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சியில் போலி டாக்டர்கள் இருப்பதாகவும் அவர்கள் மருந்துகடைகளுக்குள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் ஆயில்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் (பொ) ஆரோக்கியராஜ் விசாரணை மேற்கொண்டார். நேற்று முள்ளுக்குறிச்சி பகுதியில் காவலர்களுடன் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, இரண்டு மருந்து கடைகளுக்கு உள்ளே சிகிச்சைகள் அளிக்க வசதிகள் செய்யப்பட்டிருபது  கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்தபோது, உடல் நலக்குறைவால் மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு மருந்து கடையின் உள்ளே ரகசியமாக [...]

ராசிபுரம் அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி.

ராசிபுரம் அருகே கிணற்றில் வேலை செய்யும்போது கயிறு அறுந்து கிணற்றின் உள்ளே விழுந்த தொழிலாளி பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேரந்தவர் முருகன்(45). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு இளமதி என்ற மகள் உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இளமதிக்கு திருமணம் நடந்து.  முருகன் தனது குடும்பத்துடன், வெள்ளக்கல்பட்டி அடுத்த காட்டூர் தியாகராஜன் கோழிப்பண்ணையில் தங்கிருந்து கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முருகன், தோட்டத்து [...]

ராசிபுரம் லாட்ஜ்களில் டிஎஸ்பி திடீர் ஆய்வு.

ராசிபுரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் டிஎஸ்பி ராஜன் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். பா.ஜ. கட்சி பிரமுகர் ஆடிட்டர்  ரமேஷ் படுகொலை சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராசிபுரம் நகரில் உள்ள லாட்ஜ்கள் அனைத்திலும் டிஎஸ்பி ராஜன் புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டார் .விடுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரையும் விசாரித்து எந்த நோக்கத்திற்கு வந்துள்ளனர் ? . சரியான விலாசம் கொடுத்துள்ளளார்களா ? . என துருவி. துருவி [...]
error: Content is protected !!