ராசிபுரம்281 Videos

ராசிபுரம் அருகே பஸ்-வேன் மோதி விபத்து – 13 பேர் பலி

ராசிபுரம் : ராசிபுரம் அருகே தனியார் பஸ் மற்றும் தனியார் நிறுவன வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். ராசிபுரத்திலிருந்து ஆட்டையாம்பட்டி,இளம்பிள்ளை,சங்ககிரி வழியாக ஈரோடு செல்லும் தனியார் பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது.அதே நேரம் வெண்ணந்தூர் பகுதி தனியார் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.இரண்டு வாகனங்களும் வெண்ணந்தூரை அடுத்த வெள்ளைப்பிள்ளையார் கோயில் எனும் பகுதியில் வந்த போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த [...]

எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வலியுறுத்தி பரப்புரை

எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வலியுறுத்தி சென்னை முதல் டெல்லி வரை பரப்புரை நடத்தப்படும் என் இந்திய மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்ட்யப்பட்டது. இந்திய மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ராசிபுரம் ஜாகையில் நடந்தது. தமிழக விவசாயிகள சங்க மாநில துணை தலைவர் வேலப்பன் தலைமை வகித்தார். மக்கள் இயக்க கள அமைப்பாளர் நல்லசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெட்ரோலுக்கு  மாற்றாக எத்தானல் வாகன எரி பொருளாளாக பயன்படுத்தபட வேண்டும். இதுவே இன்று நாட்டிற்கு வந்திருக்கும் நெருக்கடிக்கு நிரந்தர [...]

ராசிபுரம் தாசில்தாருக்கு மிரட்டல், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்  தாசில்தார் சதாசிவத்திடம். ராசிபுரம் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் விஸ்வநாதன் என்பவர் வெள்ளகல்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு தனி நபர் பெயரில்  மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்குமாறு மிரட்டினாராம். மேலும் அநாகரிகமான வார்தைகளாலும் திட்டினாராம்.  இதை கண்டித்தும், விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரியும் தமிழ் மாநில வருவாய் துறை சங்கம் சார்பில் ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சத்தியநாராயணன் தலைமை வகித்தார். [...]

நாமகிரிப்பேட்டையில் சிறுமி திருமணம் நிறுத்தம்.

நாமகிரிப்பேட்டை பகுதியில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வடக்கு போயர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவரது மனைவி பேபி. இவர்களது மகள் ரேவதி(16). ரேவதி கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ரேவதிக்கும் திருச்செங்கோடு நாகர்பாளையத்தை சேர்ந்த மல்லிகா மகன் காளியப்பன் (எ) மணிகண்டன்(21) ஆகியோருக்கும் இன்று (22ம் தேதி) திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இது குறித்து சைல்ட் லைன்  அமைப்பினருக்கு தெரியவந்தது. [...]

கல்லூரி மாணவர் காரை எற்றி கொலை – 7 மாணவர்களுக்கு சிறை.

 நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தனியார் கல்லூரியில் 2 மற்றும் 3-ம் அண்டு மாணவர்களுக்கிடையே கல்லூரியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2-ம் ஆண்டு மாணவர்கள் தீபக் , தினேஸ் , இருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரியிலிருந்து சேலம் ;-தேசிய நெடுஞ்சாலையில்  வரும்போது பின்னால் தொடந்து வந்த 3-ம் ஆண்டு மாணவர்கள் லீயொ ஜோசப், மிதுன்;தாமஸ் , அஸ்வந்த், டேவிஸ் செரின் , செபின் ஜான்சன், டானிஸ் ஜான் , சரத் உள்ளிட்ட 7பேரும் காரில் துரத்திச் [...]

ராசிபுரம் அருகே தனியார் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பயணிகள் மூவருக்கு தீக்காயம் – பாமகவைச் சேர்ந்த மூவர் கைது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமாகவினர் தனியார் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்க முயன்றனர். இதில் பஸ் சிறிது சேதமடைந்து. பஸ்ஸில் பயணம் செய்த மூன்று பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பஸ்களுக்கு தீவைப்பு, கல்லெறி சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதனால் மாலை வேளையில் பஸ்கள் இயக்குவது ஆங்காங்கே தடைபட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு ஆத்தூரில் இருந்து, ராசிபுரம் [...]

ராசிபுரம் அருகே ரப்பர் சீட் லோடுடன் லாரி திருட்டு

ராசிபுரம் அருகே வீட்டின் முன்பு, ரூ.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரப்பர் சீட்டுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மாயமானது குறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபால்(48), இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். அதில், டிரைவராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த, 6ம் தேதி, கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து ரப்பர் சீட் லோடு ஏற்றிக் கொண்டு, சென்னை சென்றார். செல்லும் வழியில் உடல்நிலை சரியில்லாததால், ராசிபுரம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். [...]

வனத்துறையை கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் வனத்துறையினரின் அத்துமீறலை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முள்ளுக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான மலைப்பகுதிகள் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான இந்த வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கும் மலைக் கிராம மக்களிடம் வனத்துறையினர் மிரட்டி பணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு வன சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் போடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. 2006 வன உரிமை பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாமல் மலைவாழ் மக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற வனத்துறையினர் செயல்களை [...]

தாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி

கிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபளையத்தை சேர்ந்த இளஞ்செழியன், ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், இளங்கோ, குமரேசன் சிவபிரகாசம், நல்லசிவம், சந்திரசேகர் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் 1 ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிந்து வரும் சூழ்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியில்  சமூக சேவை செய்வதற்காக நண்பர்கள் [...]

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை எஸ்.பி நேரில் விசாரணை.

நாமகிரிபேட்டை அருகே விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் கொலை செய்து அவரது உடலை கிணற்றில் வீசிவிட்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு நாமக்கல் எஸ்.பி சத்தியப்பிரியா நேரில் சென்று விசாரணை நடத்தினார். நாமகிரிப்பேட்டை அருகேயுள்ளது அரியாக்கவுண்டம்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த குருவாலா தொப்பபட்டியார் காட்டைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன் (வயது 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துசாமியும், தாயாரும் அருகிலுள்ள இன்னொரு தோட்டத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் குணசேகரன் [...]
error: Content is protected !!