ராசிபுரம்281 Videos

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அரசு பஸ் கண்டக்டர் பலி.

ராசிபுரம் அடுத்துள்ள பேளூக்குறிச்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்.இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு செல்வதற்காக மாதேஸ்வரன் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் போயர் தெரு பகுதியில் நடந்து சென்ற போது வீதியில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததாகத் தெரிகிறது.இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாதேஸ்வ்ரான் அருகே இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த [...]

குடிநீர் விநியோக குழாயில் கள்ளத்தனமாக குழாய் அமைத்து குடிநீர் திருட்டு பொதுமக்கள் முற்றுகை.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மொஞ்சனூரில்  குடிநீர் குழாயில் பைப் அமைத்து தண்ணீர் திருடியவரை கண்டித்து, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராசிபுரம் அடுத்துள்ள மொஞ்சனூரைச் சேர்ந்தவர் ஜெயகோபால் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகில் மோகனூர்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பூமிக்கு அடியில் அமைத்து அதில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வையப்பமலை, அரசபாளையம், மொஞ்சனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். இந் நிலையில் ஜெயகோபால் [...]

பெட்ரோல் பங்கில் கலப்படம், பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள  ஆயில்பட்டி கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான  வாகனங்கள் இந்த பங்கில்தான், பெட்ரோல் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயில்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது புது இருசக்கர வாகனம் பழுதானதால் சரி செய்ய சென்றுள்ளார்.வாகனத்தை பரிசோதித்த மெக்கானிக்குகள், பெட்ரோலில்தான் பிரச்னை எனத் தெரிவித்துள்ளனர். இதேபோல், இப்பகுதியில் 17 வாகனங்கள் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த [...]

ராசிபுரத்தில் கொள்ளைபோன 30 சவரன் தங்க நகைகள் மீட்பு – நான்கு வாலிபர்கள் கைது.

கடந்த 14.06.2012-ஆம் தேதி இரவு ராசிபுரத்தை அடுத்த கோனேரிபட்டி பிரிவில் வசித்து வரும் சரவணன்(32),என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது சம்மந்தமாக வீட்டின் உரிமையாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் உத்திரவுபடி ராசிபுரம் காவல் துணை [...]

‘சேலம்-கரூர் அகல ரயில் பாதையில் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்”- கே.பி.ராமலிங்கம் எம்பி தகவல்.

‘‘சேலம்-கரூர் அகல ரயில் பாதையில் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்,’’ என கே.பி.ராமலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்து கருப்பண்ணார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராமலிங்கம் நிதி ஒதுக்கீட்டின்கீழ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சென்னையில் இருந்து பழனிக்கும், பெங்களூரில் இருந்து நாகர்கோவில், [...]

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலி குறைவாக கொடுத்தாதல் வேலை செய்ய மறுப்பு

ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலி குறைவாக கொடுத்தாதல் வேலை செய்ய மறுத்து சாலைமறியல் செய்ய முயன்றவர்களை  அதிகாரிகள் சமரசம் செய்தனர். ராசிபுரம் அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ராசிபுரம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள அகரம் நகர் அருகில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒடை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதில் சுமார் 75 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.  இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் [...]

40 அடி கிணற்றில் டிப்பர் லாரி விழுந்து விபத்து – 3 பேர் உயிருடன் மீட்பு

ராசிபுரம் அருகே கருங்கல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி  40 அடி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்ட மூவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ராசிபுரத்தை அடுத்த அணைகட்டிபாளையம் பகுதியில் துரைசாமி என்பவர் குவாரி நடத்தி வருகிறார். இங்குள்ள மலைக்குன்றை உடைத்து சிறு கற்கள் மற்றும் மோடி கற்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல இந்த  குவாரியில் இருந்து கருங்கல்லை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி , வெண்ணந்தூர் நோக்கிச் சென்றது. [...]

அரசு அதிகாரிகள் அலட்சியத்தால், சாலைகள், வயல் வெளிகளில் ஓடி வீணாகும் குடிநீர்

ராசிபுரம் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பைப்லைன்கள் அமைத்து குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த  பைப் லைன் உடைந்து பல்வேறு இடங்களில் குடிநீர் வெளியேறி சாலையில் ஓடி வீணாகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜேடர்பாளையம்- [...]

அரசு உதவித் தொகை வழங்க கமிஷன் – தபால் ஊழியரை பயனாளிகள் முற்றுகை

நாமகிரிப்பேட்டை அருகே அரசு உதவித் தொகை வழங்க கமிஷன் வாங்கிய தபால் ஊழியரை முதியவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர், விதவைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை அஞ்சல் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சீராப்பள்ளி பகுதியில் உதவித்தொகை வழங்கும் போஸ்ட்மேன் ஒவ்வொரு பயனாளியிடமும் ரூ. 50 வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட பயனாளி வீட்டிற்கு சென்று பணத்தை [...]

அரசு பள்ளி மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கு

ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பயிலும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக தன்னம்பிக்கை கருத்தரங்குகள் நடத்தப்படுவது வழக்கம். இதுபோல் அரசு பள்ளிகளிலும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் தன்னம்பிக்கை கருத்தரங்கு நடத்தமுடிவு செய்யப்பட்டது. இதன்படி ஜெயிப்பது நிஜம் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை [...]
error: Content is protected !!