ராசிபுரம்279 Videos

நரவலூர், மரூர்பட்டி, அரசநத்தம் ஊராட்சிகளில் 1344 குடும்பங்களுக்கு ரூ.69.08 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் வட்டம் நரவலூர், மரூர்பட்டி, அரசநத்தம் ஆகிய மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த 1344 குடும்பங்களுக்கு ரூ.69.08 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்களை  தொழில்துறை அமைச்சர்  பி.தங்கமணி வழங்கி பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் தற்போது திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களுக்காக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய தொகை ரூ.500லிருந்து ரூ.1000மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கல்விதுறையில் [...]

ராசிபுரத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் நகராட்சி, மாவட்ட சுகாதார துறை  சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை நகராட்சி சேர்மன் பாலசுப்ரமணியம் கொடியைசத்து துவக்கி வைத்தார்.  துப்பரவு அலுவலர் ராம்குமார், நகராட்சி துணை சேர்மன் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் விழிப்புணர்வு [...]

ராசிபுரம் அருகே எருதுவிடும் விழா

ராசிபுரம் அருகேயுள்ள ஊனாந்தாங்கல் பெரிய செக்கடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று எருது விடும்  விழா நடந்தது.  இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இராசிபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு பேராட்டம் நடத்திவருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக  நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்  புதிய ஆய்வகங்கள், வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரவேண்டும், மேலும் குடிநீர் வசதிகளை செய்து தரவேண்டும் , முதுகலை இளங்கலை மாணவர்களுக்கும் மடிகணிணி வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்களை வலியுறுத்தி திருவள்ளுவர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு பேராட்டம் நடத்தினர். [...]

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 38 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 38 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. தனியார் மண்டிகளில் மஞ்சள் மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு [...]

ராசிபுரம் ஓட்டல்களிலிருந்து ரேஷன் அரிசி, சிலிண்டர்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி.

ராசிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள், டீக்கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள், ரேஷன் அரிசி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக நாமக்கல் கலெக்டர் ஜகந்நாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கலெக்டர் உத்தரவின்படி நாமக்கல் பறக்கும் படை தனி துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு கடைகளில் பயன்படுத்திய சிலிண்டர்கள், ஓட்டல்களில் பயன்படுத்துவதற்காக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் [...]

அரசு பெண் டாக்டர் வரதட்சனை புகார் : கணவர், மாமனார் உள்ளிட்ட நால்வர் கைது

அரசு பெண் டாக்டரிடம் வரதட்சனை கேட்ட புகாரில் வருவாய் துறை ஆய்வாளராக பணியாற்றும் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட நால்வரை ராசிபுரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா கார்கூடல்பட்டி பகுதியை சேர்ந்தவர் எம்.பாபு. இவரது மகள் தேவி (35), இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வாய்க்கால்புதூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கசாமி என்பவரது மகன் டி.வி.ரவிசங்கர் (36) என்பவருக்கும் கடந்த 27.11.2006-ல் திருமணம் [...]

ராசிபுரத்தில் புதிய சிக்னல் – சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

ராசிபுரம் பழையபேருந்து நிலைய ரவுண்டானாவில் ரூ.4.00லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் விளக்கினை சபாநாயகர் ப.தனபால் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.ஜகந்நாதன் , எஸ்.பி ப.கண்ணம்மாள், நாமக்கல் ஆர்டிஓ அஜய்யாதவ், நகர்மன்றத்தலைவர் எம்.பாலசுப்ரமணியம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.

நாமக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி

நாமக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் நஞ்சப்பன் (வயது 22). இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு நவனி மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சி பார்க்க நஞ்சப்பன் தனது நண்பர்களுடன் ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை விஜயராகவன் என்பவர் ஓட்டினார் . இந்த ஆட்டோ [...]
error: Content is protected !!