ராசிபுரம்281 Videos

ராசிபுரம் டிராக்டர் பட்டரை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் அதே பகுதியில் டிராக்டர்  மற்றும் உழவுக்கு பயன்படுத்தும்

ராசிபுரம் அருகே ஆற்றில் வரும் ரசாயண நுரையால் போக்குவரத்து பாதிப்பு

  ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி பகுதி திருமணிமுத்தாற்றில் ரசாயணம் கலப்பு நுரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டநிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதில் [...]

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் வடிந்து வரும் சாயக்கழிவு நீரால் பாதிப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா,  வெண்ணந்தூர்  ஒன்றியத்திற்கு உட்பட்ட மதியம்பட்டி , சௌரிப்பாளையம், பூலான் குட்டை ஏரி, பகுதிகள் வழியாக சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாறு செல்கிறது.

பள்ளி கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எஸ்.ஃப்.ஐ தீர்மானம்.

இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட  5-வது  மாநாடு ராசிபுரத்தில் நடந்தது. மாநாட்டுக்கு ரஞ்சித் குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சக்தி கொடி  ஏற்றினார். காயத்திரி வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில பொது செயலாளர் உச்சிமா காளி துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் சரவணன் செயலாளர் அறிக்கையை முன் வைத்து விளக்க உரையாற்றினார். அறிக்கையின் மீது பல் வேறு கல்லூரி , பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் பேசினார்கள் .தங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள பிரச்சினை குறித்தும் பேசினார்கள். பின்பு மாநாட்டில் [...]

ராசிபுரம் அருகே தனியார் பேருந்துகள் மோதல் 20 க்கும் மேற்பட்டோர் காயம்.

சேலத்திலிருந்து துறையூர்  நோக்கி சென்ற தனியார் பேருந்தும் சேலத்திலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்தும் ராசிபுரம் அடுத்த சமத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது

ராசிபுரம் அருகே துவக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையம்பாளையம்  ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் அடிப்படைவசதி மற்றும் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து வலியுறுத்தி  100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாங்கள் பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள், ஸ்மார்ட் வகுப்பு ஏற்படுத்தி மகிழ்ச்சி

கிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபளையத்தை சேர்ந்த இளஞ்செழியன், ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், இளங்கோ, குமரேசன் சிவபிரகாசம், நல்லசிவம், சந்திரசேகர் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் 1 ம் வகுப்பு முதல் பள்ளி இறுதி படிப்புவரை ஒன்றாக படித்தவர்கள் இவர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிந்து வரும் சூழ்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் பகுதியில்  சமூக சேவை செய்வதற்காக நண்பர்கள் [...]

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.

நாமகிரிப்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ரூ. ஒரு லட்சம் பொருட்கள் சேதம்

ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டையில்  குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மூலச்சி பனங்காடு, பண்ணகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த காளியண்ணகவுண்டர் மகன் பெரியசாமி(70). இவரது மனைவி தாயம்மாள். இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகியதால் இருவரும் தனியாக வசித்து  வருகின்றனர். பெரியசாமி வயலில் குடிசைவீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றிருந்தபோது குடிசை வீட்டில் தீ பிடித்துக்கொண்டது. இது [...]
error: Content is protected !!