வணிகம்52 Videos

புகழ்பெற்ற “கோடக்” நிறுவனம் திவால்.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற “கோடக்” கேமரா தயாரிப்பு  நிறுவனம்  தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால் திவால் நோட்டீஸை சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த‌ “கோடக்” நிறுவனம்  கேமரா,  படச் சுருள் தயாரிப்பில் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம்  மோசமான நிர்வாகம்  போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால்  2003 முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல்  இதுவரை  தனது 13 படச் சுருள் மற்றும் கேமரா [...]

முட்டை விலை 4 பைசா உயர்வு, ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம்.

நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 4 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 372 பைசாவாக இருந்த முட்டையின் விலை 4 பைசா உயர்த்தி 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. பிறமண்டலங்களில் முட்டை விலை (பைசாக்களில்): சென்னை 380, பெங்களூர் 365, மைசூர் 369, ஹைதராபாத் 337, மும்பை 376, விஜயவாடா 330, கொல்கத்தா 365, பர்வாலா 315, டெல்லி 327. [...]

முட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.

நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது  முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இன்று நடந்த கூட்டத்தில் இந்த விலையில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் எதிரொலி, முட்டை விலை 400 பைசாவாக உயர வாய்ப்பு.

சோயா மற்றும் மக்காச்சோள ஏற்றுமதி தொடர்வதன் எதிரொலியாக தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் கண்டுவருகிறது முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு இன்றைய நிலவரப்படி 360 முதல் 375  காசுகளாக உயர்ந்துள்ளது,  இதன் எதிரொலியாக நாமக்கல் முட்டை விலை 7 பைசா உயர்ந்து 380 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர்.பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்,  இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உத்திர பிரதேசம். பீகார் மேற்கு வங்காளம். பஞ்சாப்  [...]

இந்த வாரம் இந்திய பங்கு சந்தை சரியும்

புதுடெல்லி,ஜனவரியில் மட்டும் 11 சதவீதம் உயர்ந்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில் சரியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டில் கடுமையான சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த ஆண்டில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்த மாதத்தில் 4 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதுவரை சென்செக்ஸ் 1,716 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஆகியவை குறைந்து வருவதும், கடன் வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்புமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக [...]

பரமத்தி வேலூரில் வெள்ளைக்கொடி வெற்றிலை விலை வீழ்ச்சி.

பரமத்தி வேலூரில், வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளைக்கொடி வெற்றிலையின் விலை சுமை ஒன்றுக்கு ரூ.1,500 வரை குறைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொத்தனூர், வேலூர், பாண்டமங்கலம், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பொய்யேரி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் சேலம், மதுரை, கோவை, ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் [...]

இன்றைய முட்டை விலை நிலவரம்

27.10.2012 சனிக்கிழமை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்துள்ள முட்டை விலை நிலவரம். Namakkal Rs.3.15  up by 5 paise , Chennai Rs.3.15 Bangalore Rs.3.10, Mysore Rs.3.10 Hyderabad Rs.2.90, Mumbai Rs.3.20 Vijayawada Rs.2.86, Kolkatta Rs.3.25 Barwalla Rs.3.05 Delhi Rs.3.31 Layer cull birds rate (NECC) /kg Rs.54/- (do no sell your culls less than Rs.49/- per kg.) ( i.e.catching rate is LESS [...]

தொடர்ந்து சரியும் முட்டை விலை, கோழிப்பண்ணையாளர்கள் கவலை.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒருமுட்டை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

வறட்சி காரணமாக காய்கறி வரத்து குறைவு, திருச்செங்கோடு உழவர் சந்தை வெறிச்சோடியது.

கடும் வறட்சி காரணமாக திருச்செங்கோடு உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால் விவசாயிகள் இன்றி உழவர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்செங்கோடு வட்டாரப் பகுதி விவசாயிகளுக்காக கடந்த 2000 மாவது ஆண்டு திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டது.இந்த உழவர்  சந்தை மூலம் திருச்செங்கோடு,மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலனடைந்து வந்தனர். திருச்செங்கோடு உழவர் சந்தைக்கு கிராமப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறி மூட்டைகளை கொண்டு வருவதற்காக 12 அரசு பேருந்துகள் [...]
error: Content is protected !!