வணிகம்51 Videos

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 40 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

நாமகிரிப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 40 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. தமிழகத்தில்  ஈரோட்டிற்கு அடுத்து  நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை நாமகிரிப்பேட்டையில்  உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம்  நடக்கும்.  இதில் 18 தனியார் மஞ்சள் மண்டிகள் உள்பட,   நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிளிலில் உள்ள விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை  பல்வேறு மசாலா தயாரிக்கும்  [...]

வெளி மாநில மஞ்சள் வரத்தால் விலை சரிவு – விவசாயிகள் கவலை

தமிழகத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து  மஞ்சள் அதிகளவு வருவதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக [...]

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 உயர்வு

பெட்ரோல் விலை, இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவு லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் 25-ந் தேதி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இருந்து, கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. கடைசியாக, கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது லிட்டருக்கு ஒரு ரூபாய் 80 [...]

மல்லசமுத்திரத்தில் ரூ 1 கோடிக்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  4500 மூட்டை பருத்தி ரூ 1 கோடிக்கு விற்பனையானது.

முட்டை விலை 340 காசுகளாக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 330 காசுகளாக நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதனையடுத்து முட்டை கொள்முதல் விலை 340 காசுகளாக உயர்ந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு: ஐதராபாத்318, விஜயவாடா, தனுகு314, பார்வாலா344, சென்னை340, மைசூர்328, பெங்களூர்330, மும்பை350, டெல்லி360, கொல்கத்தா355. முட்டைக்கோழி கிலோ ரூ.40க்கு விற்பனை [...]

பரமத்தி வேலூர் ஏலமார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர், பரமத்தி வேலூர் ஏல மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் வாழைத் தார் விலை உயர்வு அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா காவிரி கரையோரப்பகுதிகளான பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வாழைத் தார்கள் கோவை, ஊட்டி, சத்திய மங்கலம், சேலம், திண்டுக்கல், பழனி உள்பட [...]

முட்டை விலை உயர்வு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை 7 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மேலும் 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.02ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி பகுதி வங்கக் கடலில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும் முட்டை நுகர்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், முட்டை விலையும் குறைக்கப்பட்டு கடந்த 6-ஆம் தேதி ரூ.2.60ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட ஆசாட விரதம் முடிவுக்கு வந்ததை [...]

முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம், 324 காசுகளாக விலை நிர்ணயம் – பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 324 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை `கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை வரலாறு காணாத வகையில் 322 காசுகளாக நிர்ணயம் செய்தனர். இதற்கிடையே, நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 2 காசுகள் அதிகரிக்க [...]

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

தீவன விலை உயர்வால் முட்டை விலை 400 காசுகளாக உயரும் – பண்ணையாளர்கள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை ஏற்றம் கண்டு வருகிறது. படிப்படியாக உயர்ந்து 400 காசுகாள நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி நாமக்கல் மண்டலம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும்  3 கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பொது விற்பனைக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்டுகிறது. மேலும் பக்ரைன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. [...]
error: Content is protected !!