வணிகம்52 Videos

3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.

நாமகிரிப்பேட்டையில் 3 வாரங்களுக்குபின் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி ரகம் ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட [...]

5 வது நாளாக தொடர்ந்து முட்டை விலை சரிவு.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி 20 காசுகளும், 4-ம் தேதி 30 காசுகளும் என தொடர்ந்து 3 நாட்களில் 50 காசுகளும், இன்று ஒரே நாளில் 30 காசுகளும்  விலை குறைந்துள்ளது.  கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை [...]

அஞ்சல் அலுவலகத்தில் 7 சதவீதம் தள்ளுபடியில் தங்கம் விற்பனை.

நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தீபாவளி பண்டிகை ஒட்டி தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து நாமக்கல் தலைமை அஞ்சல் அதிகாரி ராமசாமி தெரிவித்துள்ளதாவது. நாமக்கல்,திருச்செங்கோடு மற்றும் வேலூர் தலைமை அஞ்சலகங்களில் விழாக்கால சலுகையாக சுத்த தங்கம் புஸ்ய நட்சத்திரமான இன்று 6.11.2012 செவ்வாய் முதல் தீபாவளி பண்டிகை வரை  7  சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். 100 சதவீத சுத்த தங்கம் ( 24 காரட்) 0.1 கிராம், 0.5 கிராம், 0.8 கிராம், 10 [...]

இந்த வாரம் இந்திய பங்கு சந்தை சரியும்

புதுடெல்லி,ஜனவரியில் மட்டும் 11 சதவீதம் உயர்ந்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில் சரியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டில் கடுமையான சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த ஆண்டில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்த மாதத்தில் 4 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதுவரை சென்செக்ஸ் 1,716 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஆகியவை குறைந்து வருவதும், கடன் வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்புமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக [...]

இன்றைய முட்டை விலை நிலவரம்

27.10.2012 சனிக்கிழமை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்துள்ள முட்டை விலை நிலவரம். Namakkal Rs.3.15  up by 5 paise , Chennai Rs.3.15 Bangalore Rs.3.10, Mysore Rs.3.10 Hyderabad Rs.2.90, Mumbai Rs.3.20 Vijayawada Rs.2.86, Kolkatta Rs.3.25 Barwalla Rs.3.05 Delhi Rs.3.31 Layer cull birds rate (NECC) /kg Rs.54/- (do no sell your culls less than Rs.49/- per kg.) ( i.e.catching rate is LESS [...]

கறிக்கோழி விலை திடீர் உயர்வு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், நெகமம் உள்பட பல பகுதிகளில் சுமார் 500க்கும்மேற்பட்ட கறிக்கோழி (பிராய்லர்) பண்ணைகள் உள்ளன. கடந்த மாதம் ஒருகிலோ கறிக்கோழி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.13 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பல வளர்ப்பு கோழி பண்ணையாளர்கள், கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதை குறைத்து வருகின்றனர். இதனால் தற்போது [...]

கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை – துவக்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சிறப்பு திட்டத்தின்படி ரூ. 200-க்கு மேல் மதிப்புள்ள பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தனியாக ஒரு பொருள் வாங்குபவர்களுக்கு ரூ.20 % தள்ளுபடியும் வழங்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.5,000 முதல் ரூ.8,000 விலையில் மென் பட்டுப்புடவைகள், [...]

தங்கம் விலை திடீர் உயர்வு , ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22 ஆயிரத்தை தொட்டது

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ரூ.22 ஆயிரத்தை தொட்டது. எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை, உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். முதல் முறையாக 2009-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 [...]

தங்கம் விலை ரூ.40 குறைவு

சென்னை,  சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 656 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,582-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55 ஆயிரத்து 870 ஆகவும், ஒரு கிராம் ரூ. 59.80 ஆகவும் உள்ளது.
error: Content is protected !!