வணிகம்51 Videos

தீவன விலை உயர்வால் முட்டை விலை 400 காசுகளாக உயரும் – பண்ணையாளர்கள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை ஏற்றம் கண்டு வருகிறது. படிப்படியாக உயர்ந்து 400 காசுகாள நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி நாமக்கல் மண்டலம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும்  3 கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பொது விற்பனைக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்டுகிறது. மேலும் பக்ரைன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. [...]

தங்கம் விலை ரூ.40 குறைவு

சென்னை,  சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 656 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,582-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55 ஆயிரத்து 870 ஆகவும், ஒரு கிராம் ரூ. 59.80 ஆகவும் உள்ளது.

நாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை.

நாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை சரிந்துவருதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். [...]

நாமக்கல் மாவட்டத்தில் 14 மணி நேரம் மின் வெட்டு, பல கோடி தீபாவளி ஜவுளி உற்பத்தி பாதிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வரும் 14 மணி நேர மின் வெட்டு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி ஜவுளி உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருந்து வருவது ஜவுளித் தொழிலாகும். மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், பெரியமணலி,காளிபட்டி, கைலாசம்பாளையம், கந்தம்பாளையம்,குமாரமங்கலம், எளையாம்பாளையம், கரிச்சிபாளையம், உலகப்பம்பாளையம், சித்தாளந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் [...]

மல்லசமுத்திரம் டிசிஎம்எஸ் கிளையில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  7000 மூட்டை பருத்தி ரூ.1 .50 கோடிக்கு விற்பனையானது. இன்று நடைபெற்ற ஏலத்தில்

நாமக்கல்லில ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.

நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. நாமக்கல் – திருச்செங்கோடு சாலையிலுள்ள நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல் மட்டுமன்றி அருகிலுள்ள திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்தும் பருத்தி மூட்டைகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 5,500 மூட்டைகள் வரப்பெற்றன. மறைமுக ஏலத்தில் ஆர்சிஹெச் ரக பருத்தி, குவிண்டால் ரூ.3,800 முதல் ரூ.4,100 [...]

புகழ்பெற்ற “கோடக்” நிறுவனம் திவால்.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற “கோடக்” கேமரா தயாரிப்பு  நிறுவனம்  தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால் திவால் நோட்டீஸை சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த‌ “கோடக்” நிறுவனம்  கேமரா,  படச் சுருள் தயாரிப்பில் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம்  மோசமான நிர்வாகம்  போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால்  2003 முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல்  இதுவரை  தனது 13 படச் சுருள் மற்றும் கேமரா [...]

முட்டை விலை 4 பைசா உயர்வு, ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம்.

நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 4 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 372 பைசாவாக இருந்த முட்டையின் விலை 4 பைசா உயர்த்தி 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. பிறமண்டலங்களில் முட்டை விலை (பைசாக்களில்): சென்னை 380, பெங்களூர் 365, மைசூர் 369, ஹைதராபாத் 337, மும்பை 376, விஜயவாடா 330, கொல்கத்தா 365, பர்வாலா 315, டெல்லி 327. [...]

முட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.

நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது  முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இன்று நடந்த கூட்டத்தில் இந்த விலையில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
error: Content is protected !!