வணிகம்40 Videos

முட்டை விலை வீழ்ச்சி, சில்லரை விற்பனையாளர்களுக்கே லாபம் – கோழிப்பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் உரிய விலை கிடைக்காமல் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் பி.முத்துசாமி உபதலைவர் வாங்கிலி சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 3 1/2 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது கோழிதீவன மு்லப்பொருட்களின் விலை உயர்வு.அதிகமான வெயிலின் தாக்கம். நுகர்வு குறைவு. முட்டை உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது, தற்போது முட்டையின் உற்பத்தி செலவு [...]

கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை – துவக்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சிறப்பு திட்டத்தின்படி ரூ. 200-க்கு மேல் மதிப்புள்ள பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தனியாக ஒரு பொருள் வாங்குபவர்களுக்கு ரூ.20 % தள்ளுபடியும் வழங்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.5,000 முதல் ரூ.8,000 விலையில் மென் பட்டுப்புடவைகள், [...]

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 22 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 22 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. பனங்காலி ரூ. 16 ஆயிரத்தை தொட்டது தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. [...]

நாமகிரிப்பேட்டையில் 23 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 23 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் [...]

வறட்சி காரணமாக காய்கறி வரத்து குறைவு, திருச்செங்கோடு உழவர் சந்தை வெறிச்சோடியது.

கடும் வறட்சி காரணமாக திருச்செங்கோடு உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால் விவசாயிகள் இன்றி உழவர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்செங்கோடு வட்டாரப் பகுதி விவசாயிகளுக்காக கடந்த 2000 மாவது ஆண்டு திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டது.இந்த உழவர்  சந்தை மூலம் திருச்செங்கோடு,மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலனடைந்து வந்தனர். திருச்செங்கோடு உழவர் சந்தைக்கு கிராமப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறி மூட்டைகளை கொண்டு வருவதற்காக 12 அரசு பேருந்துகள் [...]

தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் எதிரொலி, முட்டை விலை 400 பைசாவாக உயர வாய்ப்பு.

சோயா மற்றும் மக்காச்சோள ஏற்றுமதி தொடர்வதன் எதிரொலியாக தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் கண்டுவருகிறது முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு இன்றைய நிலவரப்படி 360 முதல் 375  காசுகளாக உயர்ந்துள்ளது,  இதன் எதிரொலியாக நாமக்கல் முட்டை விலை 7 பைசா உயர்ந்து 380 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர்.பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்,  இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உத்திர பிரதேசம். பீகார் மேற்கு வங்காளம். பஞ்சாப்  [...]

நாமக்கல்லில ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.

நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. நாமக்கல் – திருச்செங்கோடு சாலையிலுள்ள நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல் மட்டுமன்றி அருகிலுள்ள திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்தும் பருத்தி மூட்டைகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 5,500 மூட்டைகள் வரப்பெற்றன. மறைமுக ஏலத்தில் ஆர்சிஹெச் ரக பருத்தி, குவிண்டால் ரூ.3,800 முதல் ரூ.4,100 [...]

தீவன விலை உயர்வால் முட்டை விலை 400 காசுகளாக உயரும் – பண்ணையாளர்கள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை ஏற்றம் கண்டு வருகிறது. படிப்படியாக உயர்ந்து 400 காசுகாள நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி நாமக்கல் மண்டலம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும்  3 கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பொது விற்பனைக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்டுகிறது. மேலும் பக்ரைன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. [...]

முட்டை விலை 340 காசுகளாக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 330 காசுகளாக நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதனையடுத்து முட்டை கொள்முதல் விலை 340 காசுகளாக உயர்ந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு: ஐதராபாத்318, விஜயவாடா, தனுகு314, பார்வாலா344, சென்னை340, மைசூர்328, பெங்களூர்330, மும்பை350, டெல்லி360, கொல்கத்தா355. முட்டைக்கோழி கிலோ ரூ.40க்கு விற்பனை [...]

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 40 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

நாமகிரிப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 40 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. தமிழகத்தில்  ஈரோட்டிற்கு அடுத்து  நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை நாமகிரிப்பேட்டையில்  உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் ஏலம்  நடக்கும்.  இதில் 18 தனியார் மஞ்சள் மண்டிகள் உள்பட,   நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிளிலில் உள்ள விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை  பல்வேறு மசாலா தயாரிக்கும்  [...]
error: Content is protected !!